கர்நாடக மாநிலம் பெங்களூருவின் பூமாசந்திரா பகுதியை சேர்ந்தவர் வழக்கறிஞர் மகேந்திரா. இவருடைய மனைவி நந்தினி. இவர்களுக்கு இரண்டு வயதில் ஒரு குழந்தை உள்ளது. கடந்த வருடம் மகேந்திரன் தனது மனைவி, குழந்தையுடன் சந்தபுரா பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் அவர் வசித்து வந்த வீட்டின் உரிமையாளரின் மகன் சந்தோஷ் குமார், சென்ற வருடம் ஜனவரி மாதம் பிரான்சில் இருந்து சந்தபுராவுக்கு வந்துள்ளார். சந்தோஷ்குமார் மகேந்திரனின் மனைவி நந்தினியிடம் வந்து அடிக்கடி பேசியதுடன் மட்டுமல்லாமல், அவருக்கு தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனால், சந்தபுராவில் வசித்து வந்த வீட்டை காலி செய்துவிட்டு மகேந்திரன் தனது குடும்பத்துடன் பூமனஹெல்லிக்கு வீடு மாறியுள்ளார். ஆனாலும், நந்தினியை சந்தித்க்க சந்தோஷ் குமார் அங்கும் வந்துள்ளனர். அதன் பிறகு பிரான்ஸ் சென்ற சந்தோஷ் குமார், திரும்பவும் பிப்ரவரி மாதம் பெங்களூர்வந்துள்ளார். இங்கு வந்தவுடன் மறுபடியும் அவர் நந்தினியை பார்க்க முயற்சித்துள்ளார். அப்போது, நந்தினியின் கணவர் மகேந்திரனுக்கும் சந்தோஷுக்கும் இடையே சன்டை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து உள்ளூர் காவல் நிலையத்தில் பேச்சுவார்த்தை மூலம் இந்த பிறச்சினை தீர்க்கபட்டுள்ளது. நந்தினியை தொடர்பு கொள்ளவோ, தொல்லை கொடுக்கவோ கூடாது என சந்தோஷை காவல்துறையினர் எச்சரித்து அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து ஏப்ரல் மாதம் உள்ளூர் மதுக்கடையில் இருந்த நந்தினியின் கணவர் மகேந்திரனை சந்தோஷ் தனது நண்பர் அருணுடன் சேர்ந்து தாக்கியுள்ளனர். அப்போது, இருவருக்குமிடையே மீண்டும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் மகேந்திரன் பூமனஹெல்லி நகரில் இருந்து தனது குடும்பத்துடன் மதினா நகர் பகுதிக்கு வீடு மாறியுள்ளார். இதன் பிறகும் மதினா நகரில் மகேந்திரன் குடும்பம் வசிக்கும் இடத்தை அறிந்த சந்தோஷ் தனது நண்பர் அருணுடன் கடந்த ஏப்ரல் மாதம் 13-ம் தேதி மகேந்திரன் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது, மகேந்திரனுக்கும் சந்தோஷூக்கும் இடையே மீண்டும் சண்டை ஏற்பட்டுள்ளது. இந்த சண்டையின் மோது சந்தோஷ் அவரது நண்பர் அருண் ஆகிய இருவரையும் மகேந்திரன் ஆத்திரத்தில் மிக கடுமையாக தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த சந்தோஷையும் அவரது நண்பர் அருணையும், ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால், மகேந்திரன் கடுமையாக தாக்கியதில் படுகாயமடைந்த சந்தோஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதைத்தொடர்ந்து, சந்தோஷின் நண்பர் அருண் அளித்த புகாரின் பேரில், மகேந்திரன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், இந்த வழக்கில் தனக்கு ஜாமின் வழங்கும்படி மகேந்திரன் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், மகேந்திரனுக்கு ஜாமின் வழங்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதனை தொடர்ந்து தனக்கு ஜாமின் வழங்கக்கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மகேந்திரன் மேல்முறையீடு செய்தார். இந்த மனு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மகேந்திரனுக்கு ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. மகேந்திரன் தரப்பு வழக்கறிஞர் வாதிடுகையில், மகேந்திரன் தற்காப்புக்காவே தாக்குதல் நடத்தியதாகவும், நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் தற்காத்துக்கொள்ள உரிமை உள்ளது எனவும் தெரிவித்தார். இதனை தொடர்ந்து மகேந்திரனுக்கு ஜாமின் வழங்கிய நீதிமன்றம், மகேந்திரன் இல்லாத நேரத்தில் சந்தோஷும், அருணும் நந்தினியை பின்தொடந்து தொல்லைகொடுத்து வந்துள்ளனர் என்றும், மேலும் மகேந்திரன் வீட்டிற்குள் சந்தோஷூம், அருணும் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தியுள்ளனர், எனவே நீதிமன்றம் மகேந்திரனுக்கு ஜாமின் வழங்கியுள்ளது. தற்காத்துக்கொள்ள அனைவருக்கும் உரிமை உண்டு, மனைவிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்த நபரை கொன்ற கணவருக்கு கோர்ட்டு ஜாமின் வழங்கியது.