கர்நாடக மாநிலம், ஹூப்ளி மாவட்டத்தை சேர்ந்த கொலை குற்றவாளி பச்ஷா கான் (55). கொலை வழக்கில் 20 வருடங்கள் சிறை தண்டனை கைதியான பச்ஷா கான் தற்போது பல்லாரி சிறையில்
உள்ளார். இந்நிலையில், இந்த வழக்க்கு தொடர்பாக பச்ஷா கான் நேற்று தஹர்வாட் பகுதியில் இருக்கும் நீதிமன்றத்திற்கு மூன்று காவல்துறையினரால் அழைத்து வரப்பட்டார். நீதிமன்றத்தில் ஆஜரான பிறகு மீண்டும் தஹர்வாட் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார். அப்போது, பச்ஷா கானின் கேட்டு கொண்டதால் காவல்துறையினர் தஹர்வாட் சிறைக்கு செல்லாமல் அவரை ஹூப்ளிக்கு அழைத்து சென்றுள்ளனர்.
ஹூப்ளியின் கோகுல் ரோடு பகுதியில் இருக்கும் ஒரு ஹோட்டலுக்கு பச்ஷா கானை காவல்துறையினர் அழைத்து சென்றுள்ளனர். அந்த ஹோட்டலில் பச்ஷா கான் அவரது காதலியை சந்தித்தார். பிறகு, பச்ஷா கானும் அவரது காதலியும் ஹோட்டல் அறைக்குள் சென்றுள்ளனர். பச்ஷா கானும் அவரது காதலியும் ஹோட்டல் அறையில் தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளனர். அந்த அறைக்கு வெளியே மூன்று காவல்துறையினரும் காவலுக்கு நின்றுள்ளனர். பச்ஷா கானை தஹர்வாட் சிறைக்கு கொண்டு செல்லாமல் பெங்களூருவில் இருக்கும் ஒரு ஹோட்டலுக்கு வந்துள்ளதாக கோகுல் ரோடு பகுதி காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இந்த தகவலை அடுத்து, அந்த ஹோட்டலில் கோகுல் ரோடு பகுதி காவல்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். சோதனையில் குற்றவாளி பச்ஷாகான் தனது காதலியுடன் அங்கா ஒரு அறையில் இருந்ததையும், குற்றவாளியின் காவலுக்கு அந்த அறைக்கு வெளியே மூன்று காவலர்கள் காவலுக்கு நின்றதையும் கண்டு கோகுல் நகர் காவல்துறையினர் அதிர்ச்சியடைந்தனர். இதை தொடர்ந்து,கொலை குற்றவாளி பச்ஷாகான், அவரது காதலி மற்றும் காவலுக்கு நின்ற மூன்று காவலர்கள் என ஐந்து பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.