நடு இரவில் உதவுவது போல் நடித்து டிரைவரிடம் பணம் செல் போன் பறித்த 24 வயது இளைஞர் ஆவடியில் உள்ள வீராபுரம் பகுதியைச் சேர்ந்த ஜூட் ஆண்டனி நியூரோ(40). இவர் டிரைவராக இருந்து வருகிறார். நேற்று இரவு எப்பொழுதும் போல வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு செல்வதற்காக வேட்டை ஜங்ஷன் ரோடு அருகே நின்று கொண்டிருந்தார்.
அங்கு வண்டியில் வந்த ஒரு நபரிடம் லிப்ட் கேட்டு ஏறிச் சென்றுள்ளார். அந்த நபரும் அவரை அழைத்து கொண்டு கண்ணியமர் நகர் பகுதியில் இறக்கிவிட்டு அவரிடமிருந்த பணம் மற்றும் செல்போனை பிடுங்கிக் கொண்டு தனது இரு சக்கர வாகனத்தில் எடுத்துக்கொண்டு ஓடிவிட்டார்.
இதனை அடுத்து ஜூட் ஆண்டனி ஆவடியில் டேங்க் பேக்டரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணைக்காக பூட்டான் பணியை கன்னியம்மன் நகர் தெருவிற்கு அழைத்துச்சென்றுள்ளனர். அப்போது அங்கு எதிரே வந்த இளைஞரை பார்த்து நேற்று இரவு செல்போனை திருடி சென்றது இவர்தான் என்று அடையாளம் கூறியிருக்கிறார்.
உடனே காவல் துறையினர் அந்த நபரை பிடித்து விசாரணை செய்தனர் விசாரணையில் அந்த நபர் ஆவடி வீரபுரம் மேட்டு தெருவை சேர்ந்தவர் என்பதும், அவருடைய பெயர் பிரசாந்த் என்பதும் தெரியவந்துள்ளது. இவர் திருடியதை அவரே வாக்குமூலம் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் காவல் ஆய்வாளர் அவரை அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்