fbpx

நடு ரோட்டில் உயிரை கையில் பிடித்துக் கொண்டு ஓடிய இளைஞர்…. பட்டாகத்தியுடன் ஓட ஓட விரட்டிய ரவுடி கும்பல்…!

காஞ்சிபுரத்தில் ரவுடி கும்பல் ஒன்று‌ கையில் பட்டாக்கத்தியுடன் வாலிபர் ஒருவரை விரட்டிச்சென்ற சம்பவம் நேற்று நடந்ததுள்ளது. அவர்களை கைது செய்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். காஞ்சிபுரத்திற்கு, கோயில், மற்றும் பட்டு புடவை வாங்குவதற்காகவும் பல பகுதிகளிலிருந்து மக்கள் வருவது வழக்கம் அதனால் எப்பொழுதும் காஞ்சிபுரம் சாலைகள் மக்கள் நடமாட்டம் அதிகம் காணப்படும் எனவே பொதுமக்களை பாதுகாக்க காவல்துறை ரோந்து வந்த வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில் நேற்று பட்டப்பகலில் நான்கு பேர் கொண்ட ரவுடி கும்பல் ஒன்று காஞ்சிபுரம் மடம் தெருவில், கையில் பட்டாக்கத்திகளுடன் வாலிபர் ஒருவரை துரத்திக்கொண்டு ஓடிவந்தனர். அந்த வாலிபர் நடு ரோட்டில்  பீதியுடன் அவர்களிடம் இருந்து தப்பித்து ஓடிய காட்சி திரைப்படத்தில் வருவது போல் இருந்ததாக இதை பார்த்த அங்குள்ள மக்கள் பயத்துடன் கூறுகின்றனர். மேலும் பொதுஜனம் கூடும் இடமான சினிமா தியேட்டர், கடைகள் அதிகமுள்ள இடத்தில் நடந்த  இந்த சம்பவம் பெண்களை அச்சத்தில் ஆழ்த்தியது. இதுகுறித்து காஞ்சி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரிது‌ வந்தனர். இந்தநிலையில் பட்டாக்கத்தியுடன் இளைஞரை விரட்டிய ரவுடி கும்பல் காஞ்சிபுரத்தில் ஒருவீட்டில் பதுங்கியிருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

அதன்படி நேற்று அவர்கள் பதுங்கி இருந்த வீட்டிற்கு சென்ற காவல்துறையினர், வீட்டில் பதுங்கியிருந்த காஞ்சிபுரம் தாயார் குளம் பகுதியை சேர்ந்த தியாகு என்ற தியாகராஜன் (32), வடிவேல் (36), குள்ளநாதர் (30), பிள்ளையார்பாளையம் மடம்தெருவை சேர்ந்த குமரேசன் (64) ஆகியோரை கைது செய்தனர்.
இவர்களிடம் விசாரித்தபோது, முன்விரோதம் காரணமாக இளைஞரை விரட்டி சென்றது விசாரணையில் தெரியவந்தது. காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்டப் பகலில் நடு ரோட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைக்கும் வகையில் ரவுடி கும்பல் ஒன்று ஒருஇளைஞரை பட்டாக்கத்தியால் வெட்டுவதற்கு துரத்தி சென்ற சம்பவம்  காஞ்சிபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Baskar

Next Post

'இருக்கு ஆனா இல்ல'..! போடாத சாலைக்கு போடப்பட்டதாக கிடைத்த பதில்..! அதிர்ச்சியில் மக்கள் ..!

Fri Jul 8 , 2022
போடாத சாலைக்கு, சாலை போடப்பட்டதாகக் கிடைத்த பதிலால் அதிர்ச்சி அடைந்த சமூக ஆர்வலர் கொரட்டூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சென்னை கொரட்டூர் சிவலிங்கபுரம் பகுதியைச் சேர்ந்தவர் குமார் (54). இவர், அதே பகுதியில் உள்ள சாலை காணாமல் போனதாக வினோத புகார் ஒன்றை கொரட்டூர் போலீசில் கொடுத்துள்ளார். அந்த புகாரில், அம்பத்தூர் 7-வது மண்டலத்திற்கு உட்பட்ட கொரட்டூரில் உள்ள என்.ஆர்.எஸ் சாலை, சீனிவாசபுரம் மற்றும் கண்டிகை சாலை குறித்து தகவல் […]
'இருக்கு ஆனா இல்ல'..! போடாத சாலைக்கு போடப்பட்டதாக கிடைத்த பதில்..! அதிர்ச்சியில் சமூக ஆர்வலர்..!

You May Like