fbpx

நீர்நிலைகளை பாதுகாப்பது அரசின் கடமை; அதிகாரிகளுக்கு தெரியாமல் அது நடக்க வாய்ப்பில்லை.! சென்னை ஐகோர்ட்..!

திருவள்ளூர் மாவட்டம், அயனம்பாக்கம் கிராமத்தில் இருக்கும் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தங்கள் தரப்பின் விளக்கத்தை கேட்காமலேயே ஆக்கிரமிப்பை அகற்ற நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

மேலும் நீர்நிலைகளை ஆக்கிரமித்து அரசு சாலை அமைத்துள்ளது என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் அந்த நிலம் தங்களுக்கு சொந்தமானது என்பதை மனுதாரர்களால் நிரூபிக்க முடியவில்லை. பொதுமக்கள் மட்டுமல்ல, நீர்நிலை ஆக்கிரமிப்பில் அரசே ஈடுபட்டாலும் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே இந்த தள்ளுபடி செய்கிறோம் என உத்தரவிட்டனர்

குடிநீர் ஆதாரமாக மட்டுமின்றி சுற்றுச்சூழல் சமநிலையை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் நீர்நிலைகளை ஆக்கிரமிப்பில் இருந்து பாதுகாக்க தவறுவதால் தான், ஒருபக்கம் வறட்சியும், மற்றொரு பக்கம் வெள்ளத்தையும் எதிர்கொள்கிறோம். நீர்நிலையை பாதுகாப்பது அரசின் கடமை. மேலும் அதிகாரிகளுக்கு தெரியாமல் எந்த ஆக்கிரமிப்புகளும் நடக்க வாய்ப்பு இல்லை. இயற்கையை நாம் பாதுகாத்தால், இயற்கை நம்மை பாதுகாக்கும். சுற்றுச்சூழலை பாதுகாக்க தவறியதால் தான் புவி வெப்பமயமாதல் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

Rupa

Next Post

தாயின் கண் முன்னே மகன் உயிர் பிரிந்த கொடூரம்.. கதறி துடித்த தாய்... பரிதாப சம்பவம்..!

Sun Sep 4 , 2022
கடலூர் மாவட்டம், பண்ருட்டி எல்.என்.புரம் பகுதியில் வசிப்பவர் மோகன்(55). இவர் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி விஜயலட்சுமி (45). இவர்களுக்கு ராஜ்குமார் (32), ராஜ்கமல் (30) என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். சாப்ட்வேர் என்ஜினீயரான ராஜ்குமார் கல்யானமாகி மனைவியுடன் பெங்களூருவில் வசித்து வருகிறார். பி.எஸ்.சி. பட்டதாரியான ராஜ்கமலும் பெங்களூருவில் இருக்கும் ஒரு தனியார் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். ராஜ்கமலுக்கும், வேப்பூரில் உள்ள என்ஜினீயர் குணசுந்தரிக்கும் […]

You May Like