தமிழகத்தின் நிதி அமைச்சராக இருப்பவர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இவர் பேசியதாக 2 ஆடியோக்கள் வெளியாகி தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. முதல் ஆடியோவை சவுக்கு சங்கர் வெளியிட்ட நிலையில் இரண்டாவது ஆடியோவை பாஜகவின் அண்ணாமலை வெளியிட்டுள்ளார். இந்த நிலையில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இந்த ஆடியோ விவகாரத்திற்கு தற்போது வீடியோ மூலமாக விளக்கம் கொடுத்திருக்கிறார்.
அந்த வீடியோவில் இது போன்ற போலியான ஆடியோக்களை தொழில்நுட்பங்கள் உருவாக்கும் என்று தெரிவித்து சில வீடியோக்களை காண்பித்தார் அதன் பின்னர் உண்மை போல காட்சியளிக்கும் இது போன்ற வீடியோக்களை கணினியின் மூலமாக உருவாக்கிக் கொள்ள இயலும் என்றால் ஆடியோ கோப்புகளை என்னவெல்லாம் செய்ய இயலும் என்று கற்பனை செய்து பாருங்கள் என்று கூறினார்.
சமூக வலைதளங்களில் பரவி வரும் ஆடியோக்களை நான் பேசவில்லை அது முற்றிலும் போலி என்பதை நான் உறுதியாக சொல்லிக் கொள்கிறேன். பாஜக மாநில தலைவர் யாரோ ஒருவர் குறிப்பிட்ட எந்த நபருடனும் சொல்லாத ஒன்றை ஆடியோவாக வெளியிடும் அளவுக்கு கீழ்த்தரமாக இறங்கி இருக்கிறார் என்று கூறியுள்ளார். முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் திமுக சிறப்பான முறையில் ஆட்சி புரிந்து வருகிறது அதோடு பல நல்ல திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. இதனை பொறுத்துக் கொள்ள இயலாமல் நவீன தொழில்நுட்பத்தையும் மலிவான யுத்திக்காக பயன்படுத்தி இதுபோன்ற ஜோடிக்கப்பட்ட ஆடியோக்களை வெளியிட்டுள்ளனர் என்று கூறியிருக்கிறார் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன்.
உதயநிதி ஸ்டாலின் சபரீசன் முன்னேற்றோர் மீது களங்கம் விளைவிக்கும் முயற்சியில் இது போன்ற ஜோடிக்கப்பட்ட ஆடியோக்கள் வெளியிடப்பட்டிருக்கிறது. இவர்களிடமிருந்து என்னை பிரிப்பதன் மூலம் தங்களுடைய அரசியல் எண்ணங்களை நிறைவேற்ற துடிக்கிறது ஒரு கும்பல் ஆனால் இது போன்ற கோழைத்தனமான முயற்சிகள் ஒருபோதும் வெற்றி அடையாது. திமுக கழகம் ஆரம்பத்திலிருந்து எல்லோரும் ஒரே கழகம் ஒரே குடும்பம் என்று ஒற்றுமையாக இயங்கி வருகிறோம். அனைவரும் காலங்களிலும் அவ்வாறே தொடர்வோம் அறம் வெல்லும் என்று கூறியுள்ளார்.