fbpx

மதுரை சித்திரை திருவிழாவில் கைவரிசை…..! 42 பவுன் நகைகள் அபேஸ் 2 பெண்கள் கைது…..!

மதுரை எஸ் ஆலங்குளத்தை சேர்ந்தவர் அங்காளம்மாள் (60). கடந்த 4ம் தேதி திருவிழா பார்ப்பதற்காக சென்ற சமயத்தில் எஸ்பி பங்களா அருகே அவருடைய 4 பவுன் நகை திருடு போனது. அதோடு ரேஸ்கோர்ஸ் நெடுஞ்சாலை துறை அலுவலகம் அருகே சித்திரை திருவிழா பார்ப்பதற்காக சென்ற தல்லாக்குளம் இந்திரா நகரை சேர்ந்த சங்கரேஸ்வரிடம் 7 பவுன் நகையும், மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகம் அருகே அதே 4ம் தேதி புதூரை சேர்ந்த முத்துலட்சுமி என்பவரிடமிருந்து 3 பவுன் நகையும் காணாமல் போனது. அதேபோல டிஆர்ஓ காலனி பிள்ளையார் கோவில் அருகே புதூர் ஜவகர் புறத்தை சேர்ந்த சுந்தரி (60) என்பவருடமிருந்து 5 பவுன் நகையும் காணாமல் போனது.

ஆகவே தல்லாகுளம் பெருமாள் கோவில் அருகே சென்னை மணப்பாக்கம் சித்தம்மாளிடமிருந்து 4 பவுன் அதனை தொடர்ந்து, அதே நாளில் தல்லாகுளம் பெருமாள் கோவில் பக்கத்தில் கூட்ட நெரிசலில் சிக்கிய ஆத்திகுளம் ராமலிங்கம் என்பவரின் மனைவி சண்முக வடிவு என்பவரிடம் இருந்து 5 பவுன் நகையும், ஆனையூர் நாகம்மாள் என்பவரிடமிருந்து 3 பவுன் நகையும், மதுரை வசந்த் நகர் கல்யாணசுந்தரம் என்பவரின் மனைவி ராமதிலகத்திடம் 9 பவுன் நகையும், ஊமச்சிகுளம் பெருமாள்புரம் இதயத்துல்லா என்பவரின் மனைவி ரஜித்திடம் 2 பவுன் நகையும் கூட்டத்தில் காணாமல் போனது.

இந்த சம்பவங்கள் தொடர்பாக வழங்கப்பட்ட புகாரின் அடிப்படையில், தல்லாகுளம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையும் தூத்துக்குடியை சேர்ந்த பாலு என்பவரின் மனைவி பில்டா (62) மேற்கு வங்கா மாநிலத்தைச் சேர்ந்த ரவி பிரசாத் என்பவரின் மனைவி லதா(39) உள்ளிட்டோர் கைவரிசை காட்டி இருப்பது தெரிய வந்தது. அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 41 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டனர்.

இதற்கு நடுவே தஞ்சை மருத்துவக் கல்லூரி பகுதியைச் சார்ந்த செஞ்சியில் தேவன் என்பவர் சித்திரை திருவிழா பார்த்துவிட்டு கடந்த 6ம் தேதி யானைகால் பாலத்தில் நடந்து சென்று கொண்டிருந்தபோது அவரை வழிமறித்த அர்ஜுன் (18) என்ற இளைஞர் அவரது செல்ஃபோன் பவர் பேங்க் உள்ளிட்டவற்றை பறிக்க முயன்றார். அப்போது கையும், களவுமாக அவரை பிடித்து விளக்குத்தூண் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர் பொதுமக்கள் அவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Next Post

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வி..!! ஒரே நாளில் 4 மாணவ, மாணவிகள் தற்கொலை..!! அதிர்ச்சி..!!

Tue May 9 , 2023
தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில், தோல்வி பயம் காரணமாக 4 மாணவ, மாணவிகள் தற்கொலை செய்து கொண்டனர். சென்னை ஆவடி பாரதி நகரில் வசித்து வருபவர் கனகராஜ் மகன் தேவா (17). இவர் ஆவடி காமராஜர் நகரில் உள்ள ஒரு அரசு உதவி பெறும் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார். தமிழ், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் ஆகிய 2 பாடங்களில் தோல்வி அடைந்ததில் விரக்தி […]

You May Like