விஜய் நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் 11ஆம் தேதி வெளியான திரைப்படம் வாரிசு என்ற திரைப்படத்தை தெலுங்கு இயக்குனரான வம்சி இயக்கியிருந்தார். தற்போது இந்த திரைப்படம் 300 கோடி மேல் வசூல் வேட்டை நடத்தி இருப்பதாக கூறப்படுகிறது. இந்த திரைப்படத்துடன் அஜித் நடித்த துணிவு திரைப்படத்தை விட வாரிசு திரைப்பட மொத்த வசூல் தான் அதிகம் என்று சொல்லப்படுகிறது.

துணிவு திரைப்படத்தில் அஜித் ஒரு சில காட்சிகளில் டூப் பயன்படுத்தியதாக முன்பே விமர்சிக்கப்பட்டு வந்த நிலையில், தற்சமயம் வாரிசு திரைப்படத்தில் விஜய்க்கும் ஒருவர் சண்டை காட்சிகளில் டூப்பாக நடித்திருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. அந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.