தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் நடிகர் விஜய். இவருடைய நடிப்பில் அடுத்ததாக லியோ என்ற திரைப்படம் உருவாகி வருகின்றது. லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்த திரைப்படத்தை லலித் குமார் தயாரித்து வருகின்றார். நடிகர் விஜய் பல வருடங்களுக்கு முன்னர் வழங்கிய ஒரு பேட்டியில் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த சண்டையை பற்றி பேசி இருக்கிறார்.
அதாவது நானும் என்னுடைய நண்பர்கள் மற்றும் தோழிகள் எல்லோரும் சேர்ந்து சுற்றுலா சென்று இருந்தோம். ரயிலில் போய்க் கொண்டிருந்தபோது இரு நபர்கள் எங்களுடைய தோழிகளை கிண்டல் செய்தனர். இதன் காரணமாக, நாங்கள் கோபம் அடைந்து அவர்களை தாக்கி விட்டோம் என்று கூறியிருக்கிறார்.
அத்துடன் அவர்கள் இருவரும் அடுத்த சந்திப்பில் இறங்கி அவர்களுடைய 40 நண்பர்களுடன் காத்திருந்து ரயிலில் புகுந்து எங்களை தாக்கினார்கள். எங்களுக்கு பலத்த அடி விழுந்தது. என்னுடைய நண்பர்கள் சிலர் கட்டுடன் தான் ரயிலில் இருந்து கீழே இறங்கினார்கள் என்று தெரிவித்திருக்கிறார் நடிகர் விஜய்.