உத்திரபிரதேச மாநிலத்தில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான க்ரைம் நிகழ்ச்சியை பார்த்து சிறுவனை கடத்தி கொன்றதாக ஐந்து சிறுவர்கள் அளித்துள்ள வாக்குமூலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரபிரதேச மாநிலத்தில் கானாமல் போன ஏழு வயது சிறுவன் அலிகார் ஆற்றில் சடலமாக மீட்கப்பட்டார். ஆறு தனிப்படை அமைத்து விசாரணையை தீவிரப்படுத்திய காவல்துறையினர், 100 சிசிடிவி கேமராக்களை சோதனை செய்தபோது அதே பள்ளியில் 10-ஆம் வகுப்பு படிக்கும் ஐந்து மாணவர்கள் சிக்கியுள்ளனர்.
அந்த மாணவர்களிடம் விசாரணை நடத்தியதில் 40,000 ரூபாய் பணத்திற்க்காக சிறுவனை கடத்தியதாக காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளனர். ஒருவேளை தங்களது திட்டம் தோல்வியடைந்தால் மாட்டிக்கொள்வோம் என்ற பயத்தில் கைக்குட்டையால் சிறுவனின் கழுத்தை நெரித்து ஆற்றில் தூக்கி போட்டதாக கூறியுள்ளனர். மேலும் டிவியில் ஒளிபரப்பாகும் க்ரைம் நிகழ்ச்சியை பார்த்து சிறுவனை கடத்தி கொன்றதாக அந்த ஐந்து சிறுவர்கள் அளித்த வாக்குமூலம் உத்திரபிரதேச மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.