fbpx

போராட்டம் தீப்பற்றி எரியும் நிலையில்… போராட்டத்திற்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை ஸ்ரீமதியின் பெற்றோர் தரப்பு…!

கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம் மகள் ஸ்ரீமதி(17). ஸ்ரீமதி கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள ஒரு பிரைவேட் ஸ்கூலில் சின்னசேலம் லில் தங்கி 12 ஆம் வகுப்பு படித்து வந்தார். , இந்நிலையில் கடந்த 13 ஆம் தேதி மாணவி ஸ்ரீமதி ஹாஸ்டலின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக பள்ளி நிர்வாகம் அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

மேலும், இதுகுறித்து தகவல் அறிந்து வந்த சின்னசேலம் காவல்துறையினர், மாணவியின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், இது தொடர்பாக வழக்குப்பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் மாணவியின் உடற்கூறு ஆய்வு அறிக்கை வெளிவந்த நிலையில், மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக நீதி கேட்டு மாணவர் அமைப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது இதனால் போராட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்க தொடங்கினர்.

தொடர்ந்து பள்ளியின் முகப்பின் மீது ஏறி நுழைவு வாயிலை உடைத்து உள்ளே நுழைந்த போராட்டக்காரர்கள், பள்ளி வளாகத்தில் இருந்த பொருட்களை உடைத்தனர். இதனையடுத்து போராட்டக்காரர்களை கலைக்க வானத்தை நோக்கி காவல்துறையினர். துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்நிலையில் பள்ளி வளாகத்தில் நுழைந்த போராட்டக்காரர்கள் பள்ளி வாகனங்களை சேதப்படுத்தியதுடன், அங்கிருந்த பேருந்துகளுக்கு தீ வைத்து எரித்தனர். இதனால் அந்த பகுதி கரும்புகை மண்டலமாக காட்சி அளித்தது.

இதனிடையே சின்னசேலம் பகுதியில் நடந்த கலவரத்தில் பொருட்களை சேதப்படுத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை செய்துள்ளார். இந்நிலையில் தற்போது நடந்து வரும் போராட்டத்தில் மாணவியின் உறவினர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை என்று மாணவி தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். மேலும் வன்முறை வெடித்ததால் மாணவியின் உறவினர்கள் பாதி வழியில் திரும்பிவிட்டனர் என்று கூறுகின்றனர். போராட்டத்துக்கும், எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. போராட்டத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

Baskar

Next Post

பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கு மாணவியின் தாயாரை சந்திக்க கூட நேரமில்லையா? - அண்ணாமலை காட்டம்

Sun Jul 17 , 2022
கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பான வழக்கின் விசாரணையை உடனடியாக சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ”என்ன நடக்கிறது கள்ளக்குறிச்சியில்? ஆளும் திமுக அரசின் மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர். காவல்துறையினர் மீது மரியாதை இழந்து விட்டனர். கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டு வராமல் டிஜிபி அவர்கள் விசாரணை முடியும் வரை காத்திருக்க வேண்டும் என்கிறார். உளவுத்துறை […]
கள்ளக்குறிச்சியில் மீண்டும் போராட்டம்? வாட்ஸ் அப் தகவலால் மாவட்ட எல்லைகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு..!

You May Like