இப்போதெல்லாம் இளம் தலைமுறையினர் இடையே தங்களுக்கு எல்லாம் தெரியும், தாங்கள் எது செய்தாலும் சரியாகத்தான் இருக்கும் என்ற மனநிலை அனைவரின் மத்தியிலும் இருந்து வருகிறது. இதனால் அவர்கள் பல சிக்கலான நிலைகளில் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கும் சூழ்நிலை ஏற்பட்டு விடுகிறது.
மும்பையைச் சேர்ந்த தொழிலதிபரின் 12 வயது மகள் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் படித்து வருகிறார். கடந்த 2019 ஆம் வருடம் பள்ளியின் முன் அமான் என்ற நபரை சந்தித்து இருக்கிறார். பிறகு அவருடன் நட்பான முறையில் பழகி, பிறகு மிகவும் நெருக்கமாகி இருக்கிறார்கள்.
இப்படியே நாட்கள் சென்று கொண்டிருக்க, அந்த நபர் ஒரு நாள் நாக்பாடாவில் இருக்கின்ற ஒரு அறைக்கு சிறுமியை தனியே அழைத்துச் சென்றிருக்கிறார். அங்கே சிறுமியின் நிர்வாணமான புகைப்படங்களை எடுத்து வைத்துக்கொண்டு, அந்த புகைப்படத்தை வைத்து சிறுமியை மிரட்டத் தொடங்கியுள்ளார்.
இதன் காரணமாக, அவருடைய மிரட்டலுக்கு பயந்த சிறுமி தன்னுடைய வீட்டில் முதலில் 3 லட்சம் ரூபாய் , அதன் பிறகு 2 லட்சம் ரூபாய் என்று பெற்றோருக்கு தெரியாமல் எடுத்து வந்து அமானிடம் வழங்கியுள்ளார். அதற்குப் பிறகும் கூட அவர் தொடர்ந்து மாணவியை மிரட்டி வந்ததால் வீட்டில் இருந்த நகைகளை திருட ஆரம்பித்திருக்கிறார் அந்த சிறுமி.
இந்த நிலையில் வீட்டில் இருந்த வைர மோதிரம் நெக்லஸ் வைர வளையல்கள் தங்க செயின் தங்க லாக்கெட் போன்ற நகைகளை அந்த சிறுமி திருடி வந்து அமானிடம் ஒப்படைத்து இருக்கிறார் தன்னுடைய வீட்டில் இருந்து நகைகள் மற்றும் பணம் உள்ளிட்டவை காணாமல் போனதை தொடர்ந்து ஏதோ ஒரு தவறு நடந்ததாக குடும்பத்தைச் சார்ந்தவர்கள் சந்தேகப்பட்டு இருக்கிறார்கள்.
ஆகவே அருகில் இருந்த காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் வழங்கியுள்ளனர். காவலர்கள் வீட்டில் இருந்த எல்லோரையும் விசாரணை செய்திருக்கிறார்கள். அந்த சமயத்தில் காவல்துறையினருக்கு சிறுமியின் மீது சந்தேகம் வந்திருக்கிறது. அத்துடன் சிறுமியை தனியாக அழைத்துசென்ற காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர்.
விசாரணையில், சிறுமி தனது நிர்வாண புகைப்படங்களை வைத்து அமான் மிரட்டல் எடுப்பதாகவும், பணம் தரவில்லை என்றால் தன்னுடைய புகைப்படங்களை இணையதளத்தில் பகிர்ந்து விடுவேன் என்று மிரட்டி வருவதாகவும் அவனுக்கு கொடுப்பதற்காகவே நான் நகை மற்றும் பணத்தை திருடி சென்றேன் என்று ஒப்புதல் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து தொழிலதிபரும் மகளை புகைப்படம் எடுத்து மிரட்டி அதன் மூலமாக பணம் பறித்த நபர் மீது இந்திய தண்டனைச் சட்டம், பாலியல் வன்கொடுமை சட்டம், பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அந்த நபரை காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.