கராச்சியில் உள்ள ஒரு மூடியிருந்த தனியார் பள்ளியில், ஆஷிக் என்பவர் காவலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ஆஷிக் அவரது மனைவி நர்கீஸ் மற்றும் அவரது ஆறு குழந்தைகளுடன் கடந்த ஒன்பது மாதங்களாக மூடப்பட்டிருந்த அந்த தனியார் பள்ளியில் தங்கி இருந்துள்ளனர். இரண்டு தினங்களுக்கு முன்பாக ஆசிக், நர்கீஸ் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த சன்டையில் ஆத்திரமடைந்த ஆஷிக், தலையணை வைத்து நர்கீஷின் முகத்தில் அழுத்தி உள்ளார். இதனால் மூச்சு திணறி அவர் உயிரிழந்துள்ளார்.
அதன் பிறகு மனைவியின் உடலை அந்தப் பள்ளியின் சமையலறையில் இருந்த ஒரு பானையில் போட்டு அடுப்பில் வைத்து வேக வைத்துள்ளார். இதைப் பார்த்த ஆறு குழந்தைகளும் பயத்தில் நடுங்கிகொண்டு இருந்தனர்.
இதையெல்லாம் பார்த்து பயந்து போய் நின்றிருந்தகுழந்தைகளில் ஒரு குழந்தை மட்டும் துணிந்து அங்கிருந்து வெளிய சென்று காவல் நிலையத்தில் தகவல் கொடுத்துள்ளது. தகவல் கிடைத்தவுடன் காவல்துறையினர் விரைந்து வந்துள்ளனர். இதை முன்கூட்டியே தெரிந்து கொண்ட ஆஷிக்தன்னுடைய, மூன்று குழந்தைகளை மட்டும் தன் உடன் அழைத்துக் கொண்டு அங்கிருந்து தப்பி உள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், அடுப்பில் இருந்த நர்கீஸ் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தலைமறைவான ஆஷிக்கை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.