தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் ராஜேந்திரன் நகர் என்ற பகுதியில் நந்தினி என்ற இளம் பெண் கடந்த வெள்ளிக்கிழமை அவருடைய வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில், சடலமாக மீட்கப்பட்டார். அந்த பெண்ணின் கணவர் ரத்னதீப் தன்னுடைய மாமியார் வீட்டிற்கு போன் செய்து நந்தினி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்று கூறியுள்ளார்.
இந்த தகவலை கேட்டு அதிர்ச்சியில் உறைந்த நந்தினியின் குடும்பத்தினர் ஹைதராபாத் காவல்துறையில் புகார் வழங்கியிருக்கின்றன. அந்த புகாரில் நந்தினியை அவருடைய கணவரும், மாமியாரும் இணைந்து கொலை செய்துவிட்டு அவர் தற்கொலை செய்து கொண்டதாக நாடகம் ஆடுவதாக கூறியிருக்கிறார்கள்.
லேப் டெக்னீசியனாக பணியாற்றும் நந்தினியின் கணவர் ரத்னதீப் மற்றும் அவருடைய தாய் உள்ளிட்ட இருவரும் நந்தினியிடம் கூடுதலாக வரதட்சணை கேட்டு துன்புறுத்தி வந்ததாக நந்தினி பெற்றோர் தெரிவித்திருக்கிறார்கள். கடந்த சில தினங்களாகவே அவர்கள் தங்களுடைய மகளை கூடுதலான வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி இருக்கிறார்கள் என்றும் அவர்கள் புகாரில் குறிப்பிட்டுள்ளனர்.
திருமணத்தின் போது வரதட்சணையாக 5 லட்சம் ரூபாய் வழங்கியதாக நந்தினியின் பெற்றோர் தெரிவித்திருக்கிறார்கள் நந்தினி பெற்றோர் வழங்கிய புகாரின் அடிப்படையில், இந்திய தண்டனைச் சட்டம் 304 பி பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றன.