fbpx

பெண்களின் மாதவிடாய் சுழற்சியை இனி வாட்ஸ்அப்பில் அறிந்து கொள்ளலாம்..!

பெண்களுக்கு பயன்படும் வகையில் மாதவிடாய் சுழற்சி தெரிந்து கொள்வதற்கான வசதியை வாட்ஸ்அப் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதற்காக சிரோனா ஹைஜீன் என்ற பெண்களுக்கான சுகாதார நிறுவனத்துடன், வாட்ஸ்அப் இணைந்து செயல்பட்டுள்ளது. இந்த வசதியின்படி பெண்களின் மாதவிடாய் சுழற்சியை வாட்ஸ்அப் மூலம் தெரிந்து கொள்ளலாம் என்று அந்நிறுவனம் கூறியுள்ளது.

பெண்கள் இனி தங்கள் மாதவிடாய் சுழற்சியை கண்காணிக்க ஒரு ஆண்டிராய்டு செயலி தனியாக வைத்திருக்க அவசியம் இல்லை. இதற்காக 9718866644 என்ற எண்ணில் உள்ள சிரோனா கம்பெனியின் வாட்ஸ்அப் பிசினஸ் கணக்கிற்கு முதலில் ‘ஹாய்’ என மெசேஜ் அனுப்பவேண்டும். பின்னர், பயன்பாட்டாளர்கள் தங்கள் விவரங்களை வாட்ஸ்அப்பில் அனுப்ப வேண்டும். மேலும் சிரோனா கம்பெனி கேட்கும் சில கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டும். விவரங்களை கொடுத்தபின், உங்களின் அடுத்த மாதவிடாய் எப்போது ஏற்படும் என்ற தகவல்கள் அளிக்கப்படும்.

செயர்கை நுண்ணறிவு மற்றும் உள்ளுணர்வு ஆகிய தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட இந்த அம்சம் பெண்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

Baskar

Next Post

மனைவியின் கழுத்தை கணவன், கோடாரியால் வெட்டியதால் பரபரப்பு..!

Sun Jul 3 , 2022
உத்தரபிரதேசம் மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் வரதட்சணை கொடுமையால், மனைவியை கோடரியால் கழுத்தையறுத்து கணவன் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிரேட்டர் நொய்டாவில் உள்ள கார்பரா கிராமத்தில் செக்டர்-36 பகுதியைச் சேர்ந்த காஜல் என்பவரை ரவி என்ற இளைஞர், இந்த வருடம் மார்ச் மாதம் திருமணம் செய்து கொண்டார். திருமணம் செய்து கொண்ட பிறகு இருவருக்கும் இடையே வரதட்சணை தொடர்பாக பிரச்சனை எழுந்துள்ளது. ஆரம்பத்திலிருந்தே ரவி காஜலிடம் வததச்சனை […]

You May Like