fbpx

வொர்க் ப்ரம் ஹோம்.. புதிய நெறிமுறைகளை வெளியிட்டது வர்த்தக அமைச்சகம்..!

வீட்டிலிருந்து வேலை செய்வோருக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி சிறப்பு பொருளாதார மண்டலங்களில் உள்ள நிறுவனங்கள் அவர்களின் ஊழியர்களை அதிகபட்சமாக ஒரு வருட காலம் வீட்டிலிருந்து பணி செய்ய அனுமதிக்கலாம். அதுபோலவே 50% ஊழியர்களுக்கு இந்த வசதியை வழங்கலாம், என வர்த்தக அமைச்சகம் அறிவித்துள்ளது. இதற்காக சிறப்பு பொருளாதார மண்டல சட்டத்திட்டங்கள் 2006-ல் புதிதாக விதி எண் 43A சேர்க்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்தின்படி புதிய விதிகள் அமல்படுத்தப்பட உள்ளன. இதன் மூலம் நாடு முழுவதும் ஒரே மாதிரியான வீட்டிலிருந்து வேலை செய்யும் விதிகள் அமலுக்கு வரும் எனக் கூறப்படுகிறது.

வீட்டிலிருந்து பணிசெய்வது என்பது 50% ஊழியர்களுக்கு நீட்டிக்கப்படலாம். ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் இது தொடரலாம். மேலும் அதிகபட்சமாக ஓராண்டுக்கு வீட்டிலிருந்து வேலை காலத்தை தொடரலாம். அதுவே மேலும் நீட்டிக்கப்பட வேண்டும் என்றால் ஆணையர் அனுமதியுடன் மேலும் ஓராண்டுக்கு தொடரலாம். அல்லது 90 நாட்களுக்கு நீட்டிக்கப்படலாம். அதேபோல் வீட்டிலிருந்து பணி புரிவோருக்கு தேவையான இணைய வசதி, உபகரணஙகள் என அனைத்தையும் அந்த நிறுவனங்கள் தான் செய்து தர வேண்டும். மேலும் அலுவலகம் சார்ந்த உபகரணம் ஏதாவது வீட்டிறகு எடுத்துச் செல்ல வேண்டும் என்றால் நிர்வாகத்தின் அனுமதியுடன் செய்யலாம்.

ஒருவேளை 50% க்கும் மேற்பட்ட ஊழியர்களை வீட்டிலிருந்து பணி புரிய அனுமதிக்க நிறுவனம் விரும்பினால் அதற்கான காரணங்களை எழுத்துப்பூர்வமாக பட்டியலிட வேண்டும். இவ்வாறு புதிய வழிகாட்டுதலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Baskar

Next Post

ஜிஎஸ்டி கூட்டங்களில் அமைச்சர் எதிர்ப்பு தெரிவிக்காமல் வாயில்லா பூச்சியாக இருந்தது ஏன்? - எடப்பாடி பழனிசாமி

Wed Jul 20 , 2022
உணவுப் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”ஜிஎஸ்டி-யின் 47-வது கூட்டம் மத்திய நிதியமைச்சர் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திமுக அரசின் நிதி அமைச்சரும் கலந்துகொண்டார். அதிமுக ஆட்சியின்போது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் அரசு சார்பாக ஜெயக்குமார் கலந்துகொண்டார். அப்போது, தமிழ்நாட்டின் சார்பாக பல அத்தியாவசியப் பொருட்களுக்கு வாதாடி வரி விலக்கு பெறப்பட்டது. […]
பொது இடத்தில் விவாதிக்க தயாரா..? முதல்வர் முக.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி சவால்..!!

You May Like