முறை தவறிய உறவு என்பது ஒருவருடன் இருந்தால் அந்த முறை தவறிய உறவு நிச்சயமாக அந்த உறவில் ஈடுபடுபவரை தனக்கு அடிமையாக்கி கொள்ளும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. இது பல நேரங்களில், பல இடங்களில் நிரூபணம் ஆகி இருக்கிறது.
அந்த வகையில், மதுரை மாவட்டத்தைச் சார்ந்த ஸ்ரீதர் தனியார் மருத்துவமனை ஒன்றில் உணவக மேலாளராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி கீர்த்தனா இவர்களுக்கு சாய் சர்வேஷ் என்ற மகன் இருக்கிறார். ஸ்ரீதர் தன்னுடைய குடும்பத்தினருடன் அன்னூர் மசக்கவுண்டன் செட்டிபாளையம் ஊராட்சியில் இருக்கின்ற செந்தாம்பாளையம் என்ற பகுதியில் வசித்து வருகின்றார்.
இந்த சூழ்நிலையில், ஸ்ரீதருக்கு அவர் வேலை செய்யும் அதே பகுதியில் அவருடன் வேலை பார்க்கும் ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த தொடர்பு நாளடைவில் கள்ளக்காதலராக மலர்ந்தது.
இது ஸ்ரீதரின் மனைவிக்கு தெரிந்து அவர் கண்டித்ததாக தெரிவிக்கப்படுகின்றது. ஆகவே கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. ஒரு கட்டத்தில் ஆத்திரத்தின் உச்சத்தில் இருந்த ஸ்ரீதர் கீர்த்தனாவை அடித்து துன்புறுத்தி இருக்கிறார்.
இந்த சூழ்நிலையில் தான் கள்ளக்காதல் விவகாரத்தில் கணவர் உட்பட 3 பேர் தனக்கு விஷ ஊசி செலுத்தி கொலை செய்ய முயற்சி செய்ததாக கீர்த்தனா அன்னூர் காவல் நிலையத்தில் புகார் வழங்கினார். இந்த புகாரை அடிப்படையாகக் கொண்டு காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினார்.
அந்த விசாரணையில் ஸ்ரீதரின் கள்ளக்காதலி ரம்யா அவருடைய நண்பர் பழனி உள்ளிட்ட மூவரும் இணைந்து கீர்த்தனாவுக்கு விஷ ஊசி செலுத்தி கொலை செய்ய முயற்சி செய்தது. காவல்துறையினரின் விசாரணையில் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து, ஸ்ரீதரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.
அத்துடன் தலைமறைவான ரம்யா மற்றும் பழனியை காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் ரம்யா, பழனி உள்ளிட்ட இருவரும் கோயமுத்தூர் சின்னியம்பாளையம் ஆர்.ஜே புதூர் பகுதியில் இருப்பது பெரியது உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று அன்னூர் காவல்துறையினர் ரம்யா மற்றும் பழனி உள்ளிட்ட இருவரையும் கைது செய்தனர்.