fbpx

அடுத்த ஆபத்து.. புதிதாக பரவும் ‘ஆசிட் ஈ’ தொற்று… 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிப்பு…

சமீபத்தில் சிக்கிம் மாநிலத்தில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியின் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆசிட் பூச்சி அல்லது நைரோபி ஈ உடன் தொடர்பு கொண்டதால் கடுமையான தோல் நோய்த்தொற்றுகளால் பாதிக்கப்பட்டனர். நைரோபி ஈ பூச்சி தொற்றால் பாதிக்கப்பட்ட ஒரு மாணவரின் கையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.. அதே நேரத்தில் பாதிக்கப்பட்ட மற்ற மாணவர்களுக்கு மருந்துகள் வழங்கப்பட்டு இப்போது குணமடைந்து வருகின்றனர் என்றும் கூறியுள்ளனர்

டார்ஜிலிங், சிக்கிம், மேற்குவங்கம் உள்ளிட்ட பல இடங்களில் இந்த ஆசிட் ஈ நோய்த்தொற்றின் பாதிப்புகள் பதிவாகியுள்ளன. ஆசிட் ஈ தொற்று முதன்முதலில் சிக்கிமில் தோன்றியது மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளுக்கும் பரவியது என்றும் கூறப்படுகிறது.. சிலிகுரியில் உள்ள வடக்கு பெங்கால் பல்கலைக்கழகத்தின் (NBU) சுமார் 100 மாணவர்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மாணவர்கள் மத்தியில் அச்சமும் பீதியும் அதிகரித்துள்ளதால், பலர் விடுதிகளை விட்டு வெளியேறி வீடுகளுக்குச் சென்று விட்டனர். இதற்கிடையில், இந்த ஆபத்தான ஈக்களை தடுக்க டார்ஜிலிங் மாவட்ட நிர்வாகம் அறிவுரை வழங்கியுள்ளது. முக்கியமாக குழந்தைகள் மற்றும் சென்சிட்டிவ் தோல் கொண்டவர்கள் இந்த பூச்சியால் பாதிக்கப்படுகின்றனர்.

முழு கை ஆடைகளை அணிவது, மாலையில் வெளியே செல்வதைத் தவிர்ப்பது, கொசுவலை பயன்படுத்துவது, வீட்டிற்குள் மங்கலான விளக்குகளைப் பயன்படுத்துவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொற்று ஏற்பட்டால், மக்கள் உடனடியாக சிகிச்சைக்கு தொடர்பு கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது..

இந்த சூழ்நிலையில், பெரிய அச்சுறுத்தல் எதுவும் இருக்காது, மக்கள் பீதி அடையாமல் அமைதியாக இருக்க வேண்டும். தற்போது நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்துவதும், பூச்சிகள் இனப்பெருக்கம் செய்யும் இடங்களைக் கண்டறிவதுமே தங்களது இலக்கு என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்..

நைரோபி ஈ தொற்று என்றால் என்ன..? கிழக்கு ஆப்பிரிக்காவை பூர்வீகமாகக் கொண்ட நைரோபி ஈக்கள் கென்ய ஈக்கள் அல்லது டிராகன் ஈக்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. சிறிய, வண்டு போன்ற பூச்சிகள் ஆரஞ்சு மற்றும் கருப்பு நிறத்தில் உள்ளன.. இந்த பூச்சிகள் பொதுவாக சிக்கிம் போன்ற அதிக மழைப்பொழிவு உள்ள பகுதிகளில் காணப்படுகின்றன.. பெரும்பாலும் குழந்தைகள் மற்றும் உணர்திறன் வாய்ந்த சருமம் உள்ளவர்களை பாதிக்கப்படுகின்றனர்.

நைரோபி ஈக்கள் பிரகாசமான ஒளி மற்றும் ஈரமான பகுதிகளில் அதிகம் காணப்படுகின்றன.. இந்த ஈக்கள் பொதுவாக பயிர்களை அழித்து பூச்சிகளை உண்ணும். நைரோபி ஈக்கள் கடிக்காது என்றாலும், மனிதர்களின் தோலின் மீது இருந்தாலே அவை எரிச்சலை ஏற்படுத்தும் சக்திவாய்ந்த அமிலப் பொருளை வெளியிடுகின்றன. எரிச்சலை ஏற்படுத்தும் நச்சுப் பொருள் பெடரின் என்று அழைக்கப்படுகிறது.

இந்த தொற்று ஏற்பட்டால், தோல் எரிச்சல், தோல் அழற்சி அல்லது புண்களை ஏற்படுத்தும். சிறிய கொப்புளங்கள் ஏற்படுவதுடன் அந்த நச்சு உடலில் அதிகமாக பரவி காய்ச்சல், நரம்பு வலிகள், மூட்டு வலிகள் அல்லது வாந்தியெடுத்தல் போன்றவற்றை உண்டாக்கினால் மிகவும் கடுமையான பாதிப்பு ஏற்படலாம். நச்சுகள் நபரின் கண்களுடன் தொடர்பு கொண்டால், அது வெண்படல அழற்சி மற்றும் தற்காலிக குருட்டுத்தன்மையை ஏற்படுத்தும் என்று சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்..

Maha

Next Post

மதுராந்தகம் விபத்து.. உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..

Fri Jul 8 , 2022
மதுராந்தகம் பேருந்து விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிதி வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மதுராந்தகம் அருகே தொழுப்பேடு என்ற இடத்தில் நின்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது சிதம்பரம் நோக்கிச் சென்ற அரசுப்பேருந்து கட்டுப்பாட்டை இழந்து மோதியது.. இந்த கொடூர விபத்தில், 2 பெண்கள் உள்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.. 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.. […]
பிரியா மரணம்..!! சிக்கியது முதல்வர் முக.ஸ்டாலினின் பழைய ட்வீட்..!! விளாசும் பாஜக தலைவர்கள்..!!

You May Like