fbpx

தமிழ் திரையுலகில் அடுத்த சோகம்.. ரஜினி பட தயாரிப்பாளர் காலமானார்..

பிரபல தயாரிப்பாளர் ஹேம்நாக் பாபு ஜி இன்று காலமானார்.. அவருக்கு வயது 76.

தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பாளராக வலம் வந்தவர் ஹேம்நாக் பாபுஜி.. ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான காளி, கர்ஜனை ஆகிய படங்களை இவர் தயாரித்தார்.. மேலும் சுயம்வரம் படத்தையும் ஹேம்நாக் பாபுஜி தான் தயாரித்திருந்தார்.. 24 மணி நேரத்தில் எடுக்கப்பட்ட படம் என்ற கின்னஸ் சாதனையை இப்படம் படைத்தது.. திரைப்பட தயாரிப்பு தவிர, திரைப்பட விநியோகம், பைனான்ஸ் ஆகிய துறைகளிலும் ஹேம்நாக் பாபுஜி ஈடுபட்டு வந்தார்.. இந்நிலையில் வயது மூப்பு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக ஓய்வில் இருந்தார்..

இந்நிலையில் ஹேம்நாக் பாபுஜி இன்று உடல்நலக்குறைவால் காலமானார்.. வயது தொடர்பான பிரச்சனைகளுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று சிகிச்சை பலனின்று உயிரிழந்தார்.. அவரின் மறைவுக்கு பல்வேறு திரைப்பிரபலங்களும் தங்களின் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.. ஹேம்நாக் பாபுஜியின் மறைவுக்கு தயாரிப்பாளர் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது..

கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரபல இயக்குனரும் நடிகருமான கே.விஸ்வநாத் காலமானார்.. இதை தொடர்ந்து பழம்பெரும் பின்னணி பாடகி வாணி ஜெயராம் மரணம் அடைந்தார்.. மேலும் பிரபல இயக்குனரும், நகைச்சுவை நடிகருமான டி.பி. கஜேந்திரன் காலமானார்.. இப்படி தமிழ் திரையுலகில் பிரபலங்களின் மறைவு சோகத்தை ஏற்படுத்தி உள்ளது..

Maha

Next Post

பாகிஸ்தான் அணி நிச்சயம் இதை செய்யாது….! ரவிச்சந்திரன் அஸ்வின் நம்பிக்கை….!

Tue Feb 7 , 2023
இந்தியா, பாகிஸ்தான் அணிகள் கிரிக்கெட் போட்டி என்றால் இன்றளவும் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு காணப்படும்.கிரிக்கெட்டை பொருத்தவரையில் மிகப்பெரிய ஜாம்பவானாக திகழ்ந்துவரும் ஆஸ்திரேலியா அணியுடன் இந்தியா விளையாடி வெற்றி பெற்றால் கூட ரசிகர்களிடையே அப்படி பெரிய அளவில் மகிழ்ச்சி இருக்காது. ஆனால் பாகிஸ்தான் உடன் மோதி இந்திய அணி வெற்றி பெற்றால் இந்திய ரசிகர்கள் குதூகலத்தில் கூத்தாடுவார்கள். என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு பாகிஸ்தான் என்றால் இந்திய ரசிகர்களிடையே […]
இந்திய அணியில் கால்பதிக்கும் தமிழக வீரர்கள்...! ஐபிஎல் பெற்றுத்தந்த வாய்ப்பு..! யார் அந்த வீரர்கள்?

You May Like