விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது கொஞ்சம் சுவாரஷ்யமான சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில், இன்றைய நிகழ்வுக்கான மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.
அந்த வீடியோவில், விசித்ரா மேம் என்று கூப்பிட சொன்னதற்கு நிக்சன் என்னை நிக்சன் சார் என்று சொல்லுங்க என்று சொன்னார். அதனால் தான் நான் இனி அப்படி மரியாதையை கொடுத்து கூப்பிட போகிறேன். ஐஷு வெளியே போனதற்கு நான் தான் காரணம் என்று சொன்னார் என விசித்ரா கமலிடம் கூறுகிறார்.
இதனை கேட்ட கமல் அப்படி சொன்னிங்களா நிக்சன் என்று கேட்க நான் அப்படி சொல்லவில்லை என்று சொல்கிறார். அதற்கு கமல் நான் பார்த்தேன் நான் உங்களுக்கு புரியவைக்கிறேன் என்று கூறுகிறார். இதனை பார்க்கும்போது, அடுத்து நிக்சனுக்கு தான் குறும்படம் போட்டு காட்டப்படும் என தெரிகிறது.