fbpx

செந்தில் பாலாஜி, கே.என்.நேரு, பொன்முடிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்..!! சபாநாயகரிடம் முறையிட்ட அதிமுக..!!

திமுக அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, கே.என் நேரு, பொன்முடிக்கு எதிராக சட்டப்பேரவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர அதிமுக சார்பில் சபாநாயகருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.

டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளதாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டியுள்ள நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி மீதும், பெண்களையும், மதங்களையும் ஆபாசமாக பேசிய அமைச்சர் பொன்முடி மீதும், நகராட்சி துறையில் நடைபெற்ற ஊழலுக்கு அமைச்சர் கே.என்.நேரு மீதும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர அதிமுக கடிதம் அளித்துள்ளது.

இந்நிலையில், தாங்கள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீது சட்டப்பேரவையில் விவாதம் நடத்த சபாநாயகர் அப்பாவு அனுமதி மறுத்துவிட்டதாக எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “சட்டப்பேரவையில் அமைச்சர்கள் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர சபாநாயகரிடம் முறையிட்டோம்.

ஆனால், எங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால், வெளிநடப்பு செய்துள்ளோம். கோபத்தில் இருக்கும் மக்களை மடைமாற்றம் செய்யவே மாநில சுயாட்சி குறித்து முதல்வர் முக.ஸ்டாலின் பேசியிருக்கிறார். அதிமுகவினரை தொடர்ந்து புறக்கணிப்பதிலேயே சபாநாயகர் நேரத்தை செலவிட்டு வருகிறார்” என்று குற்றம்சாட்டினார்.

Read More : முடிந்தது 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு..!! இன்று முதல் கோடை விடுமுறை ஆரம்பம்..!! கொண்டாட்டத்தில் மாணவர்கள்..!!

English Summary

A letter has been written to the Speaker on behalf of the AIADMK to move a no-confidence motion in the Legislative Assembly against DMK ministers Senthil Balaji, K.N. Nehru and Ponmudi.

Chella

Next Post

'பாமக பஞ்சாயத்து முடிவுக்கு வந்தது'..!! ’தற்போது எந்த பிரச்சனையும் இல்லை’..!! ஜி.கே.மணி பரபரப்பு பேட்டி..!!

Tue Apr 15 , 2025
G.K. Mani has stated that the internal conflict within the Workers' People's Party has been resolved.

You May Like