fbpx

மக்களே கவனம்…; இனி உணவகங்களில் இதை கட்டாயம் கடைபிடிக்க வேண்டுமாம்…! மத்திய அரசு அதிரடி அறிவிப்பு…!

நுகர்வோர் உரிமைகளை மீறும் வகையிலும், முறையற்ற வர்த்தக நடைமுறையை தடுக்கும் வகையிலும், உணவகங்கள் சேவை வரியை விதிப்பது தொடர்பாக, மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

இது குறித்து மத்திய நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்; உணவு உண்டதற்கான விலை ரசீதுகளில் உணவகங்கள் சேவை வரியை தாமாக சேர்க்கக்கூடாது என்றும், வேறு எந்த ஒரு பெயரிலும் சேவை வரியை வசூலிக்கக்கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது. சேவை வரியை செலுத்துமாறு உணவகங்கள் நுகர்வோரைக் கட்டாயப்படுத்தக்கூடாது என்றும், சேவை வரியை செலுத்துவது நுகர்வோரின் விருப்பம் என்பது அவர்களிடம் தெரிவிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. உணவு உண்டதற்கான விலை ரசீதில் சேவை வரி வசூலிக்கக்கூடாது என்றும், மொத்தத் தொகையில் சரக்கு மற்றும் சேவை வரி விதிக்கக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு விதிகளை மீறி எந்த உணவகமாவது சேவை வரியை விதித்தால் அதனை நீக்குமாறு உணவகத்திடம் முறையிடலாம் என்று கூறப்பட்டுள்ளது. அத்துடன், 1915 அல்லது தேசிய நுகர்வோர் உதவி மையத்தின் மொபைல் செயலி மூலம் நுகர்வோர் புகார் அளிக்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் நுகர்வோர் ஆணையத்திடம் அவர்கள் புகார் தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. இவ்விவகாரத்தில் விரைவான  தீர்வுகாண www.e-daakhil.nic.in என்ற இணையதளம் மூலம் புகார் பதிவு செய்யலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரிடமும் நுகர்வோர் புகார் தெரிவிக்கலாம்.

Also Read: “அடுத்த ஷாக் நியூஸ்” ஆட்டோக்களுக்கு மீட்டர் கட்டணம் ரூ.25லிருந்து ரூ.30 ஆக உயர்த்தப்படும்…! போக்குவரத்து அமைச்சர் அறிவிப்பு…!

Vignesh

Next Post

"அறிய வாய்ப்பு" ஆசிரியர்களுக்கு மொத்தம் 13,331 காலிப்பணியிடங்கள்...! நாளை மாலைக்குள் விண்ணப்பிக்க வேண்டும்...!

Tue Jul 5 , 2022
அரசு தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள் மற்றும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள 13,331 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை ஆணையர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்; தொடக்கப்பள்ளிகளில் காலியாக உள்ள 4,989 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் ரூ.7,500 தொகுப்பூதியத்தில் ஜூலை முதல் அடுத்த ஆண்டு ஏப்ரல் வரையிலும்; 5,154 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் ரூ.10,000 தொகுப்பூதிய அடிப்படையில் ஜூலை மாதம் […]

You May Like