fbpx

’இனி அப்டேட் கிடையாது’..!! ’செல்போனை தான் மாத்தணும்’..!! வாடிக்கையாளர்களுக்கு வாட்ஸ் அப் வைத்த செக்..!!

வாட்ஸ்அப் நிறுவனம் தொடர்ச்சியாகப் பல அப்டேட்களை கொடுத்து வருகிறது. சந்தையில் நிலவும் போட்டியைச் சமாளிக்கவும் யூசர்களை தக்க வைக்கவும் புது புது வசதிகளை வழங்குகிறது. இதற்கிடையே, வாட்ஸ்அப் நிறுவனம் இப்போது பழைய செல்போன்களுக்கான ஆதரவை நிறுத்தியுள்ளது. ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதுகுறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், இப்போது அந்த மாடல்களுக்கான ஆதரவை வாட்ஸ்அப் நிறுவனம் நிறுத்தியுள்ளது.

பழைய ஆண்ட்ராய்டு மொபைல்களுக்கான ஆதரவை வாட்ஸ் அப் நிறுத்துகிறது. இனி குறிப்பிட்ட மொபைலை வைத்திருப்போரால் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்த முடியாது. இந்த வாரத் தொடக்கத்தில் இருந்தே இந்த மாடல்களில் வாட்ஸ்அப் வேலை செய்வதில்லை என்ற கூறப்படுகிறது. அதாவது ஆண்ட்ராய்டு 4.4, அதாவது கிட்கேட் மாடலை வைத்திருப்போர் இனி வாட்ஸ்அப் பயன்படுத்த முடியாது.

தற்போது வாட்ஸ்அப் வெளியிட்ட தகவல்களின்படி, குறைந்த எண்ணிக்கையிலான மொபைல்கள் மட்டுமே ஆண்ட்ராய்டு கிட்கேட்டில் இயங்கி வந்தன. அவற்றுக்கான சப்போர்ட்டை நிறுத்தப்பட்டுள்ளது. இனிமேல் அவர்கள் வாட்ஸ்அப் செயலியைப் பயன்படுத்த வேண்டும் என்றால் அவர்களின் ஒரே ஆப்ஷன் புதிய மொபைலை வாங்குவது மட்டுமே. தற்போது நீங்கள் வாட்ஸ்அப் செயலியைப் பயன்படுத்த வேண்டும் என்றால் குறைந்தது ஆண்ட்ராய்டு 5.0, அதாவது லாலிபாப் வெர்ஷன் அல்லது அதற்குப் பிறகு வந்த ஆண்ட்ராய்டு பதிப்பை நீங்கள் வைத்திருக்க வேண்டும். அதற்கு முந்தைய வெர்ஷன்களில் வாட்ஸ்அப் இனி வேலை செய்யாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

பாக்ஸ் ஆஃபீசை தெறிக்கவிடும் லியோ..!! இதுவரை வசூல் எத்தனை கோடி தெரியுமா..?

Fri Oct 27 , 2023
‘லியோ’ திரைப்படத்தின் முதல் வார வசூல் குறித்த விவரங்களை படக்குழு வெளியிட்டுள்ளது. விஜய் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய படம் ‘லியோ’. த்ரிஷா, அர்ஜூன், சஞ்சய் தத், கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட இந்திய சினிமாவின் நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியானது. ரசிகர்களின் கலவையான விமர்சனங்களுடன் ‘லியோ’ திரைப்படம் வசூலை அள்ளிக் குவித்து வருகிறது. இத்திரைப்படத்தின் பாடல்களும் […]

You May Like