fbpx

இடைவிடாத இஸ்ரேல் தாக்குதல்!. லெபனானில் 105 பேர் கொல்லப்பட்டனர்!. அமைச்சகம் தகவல்!

Israeli Attack: லெபனான் முழுவதும் நேற்று இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் குறைந்தது 105 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 359 பேர் காயமடைந்துள்ளனர் என்று அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பெய்ரூட்டின் மக்கள்தொகை அடர்த்தியான தெற்கு புறநகர்ப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் லெபனானின் ஹெஸ்பொல்லா குழுவின் தலைவரான ஹசன் நஸ்ரல்லாஹ் கொல்லப்பட்டார். இதையடுத்து , நேற்று முக்கிய தெற்கு நகரமான சிடோனுக்கு அருகே கொடிய தொடர் வான்வழி தாக்குதலை கையில் எடுத்த இஸ்ரேல் இராணுவம் அங்குள்ள ஹெஸ்பொல்லா இலக்குகள் மீது குண்டுவீச்சைத் தொடர்ந்ததாகவும் யேமனைத் தாக்கியதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக லெபனான் சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில், ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதலில் 100 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர், மற்றும் 359 பேர் காயமடைந்தனர் என்று கூறியுள்ளது. பாலஸ்தீனப் பகுதியில் போரைத் தூண்டி, அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேலைத் தாக்கிய காஸாவில் ஹமாஸ் போராளிகளுக்கு ஆதரவாகச் செயல்படுவதாக ஹிஸ்புல்லா கூறுகிறது.

இஸ்ரேல் தனது கவனத்தை காசாவில் இருந்து லெபனானுக்கு வடக்கே திருப்பி, தாக்குதல் தீவிரமடைந்த பிறகு, கடந்த திங்கட்கிழமை முதல் இஸ்ரேலிய தாக்குதல்களில் நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இது லெபனானின் 1975-1990 உள்நாட்டுப் போருக்குப் பிறகு மிக மோசமான தாக்குதல் ஆகும் என்று கூறப்படுகிறது.

கிழக்கு லெபனானின் பெக்கா பள்ளத்தாக்கில் உள்ள Baalbek-Hermel பகுதியும் கடுமையாக பாதிக்கப்பட்டது, 33 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 97 பேர் காயமடைந்தனர் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாட்டின் தெற்கு Nabatiyeh கவர்னரேட்டிலும், Marjaayun நகரம் உட்பட பலத்த உயிரிழப்புகள் ஏற்பட்டன. இந்த வார இறுதியில் லெபனான் மீதான அதன் தீவிரமான தாக்குதல்கள் ஹெஸ்பொல்லா செயற்பாட்டாளர்களை குறிவைப்பதாக இஸ்ரேல் கூறியுள்ளது,

Readmore: ஐபிஎல் 2025!. விடுவிக்கப்படும் ஹர்திக் பாண்டியா?. இந்த வீரர் மட்டும்போதும்!. மும்பை இந்தியன்ஸின் நிலை என்ன?

English Summary

Over 100 killed in Israeli strikes in Lebanon: Ministry

Kokila

Next Post

மக்களே...! இன்றே கடைசி நாள்... உடனே குடிநீர் வரியை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்..!

Mon Sep 30 , 2024
Water tax should be paid online

You May Like