fbpx

’ஓபிஎஸ் மீதிருந்த சிறிய அளவிலான மரியாதை கூட தற்போது இல்லை’..! – கோகுல இந்திரா

கோவிலாக நினைக்கக் கூடிய அதிமுக கட்சி அலுவலகத்தை கடப்பாறை கொண்டு உடைத்து அராஜகம் செய்தவர் ஓபிஎஸ்’ என்று கோகுல இந்திரா கடுமையாக பேசியுள்ளார்.

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிசாமியை, கட்சி நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவும் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பொதுக்குழுவுக்கான தீர்ப்புக்காக அனைவரும் காத்து கொண்டு இருக்கின்ற சூழ்நிலையில் தீர்ப்பு வெளிவருவதற்கு முன்பே வீட்டில் இருந்து ஓபிஎஸ் தலைமை கழகத்துக்கு புறப்பட்டார். அவருடைய பாதுகாப்புக்கு வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்கள் தொடர்ந்து சென்றுள்ளனர். அவரது ஆதரவாளர்கள் உருட்டு கட்டை, கடப்பாறை போன்ற ஆயுதங்களை கொண்டு வந்துள்ளனர்.

Junior Vikatan - 06 March 2022 - “எல்லோரும் ஜெயலலிதா ஆகிவிட முடியாது!” -  யாரைச் சொல்கிறார் கோகுல இந்திரா? | ADMK former minister Gokula Indira  interview - Vikatan

நாமெல்லாம் கோவிலாக நினைக்கக்கூடிய கட்சி அலுவலகத்தை கடப்பாறை கொண்டு உடைத்து அராஜகம் செய்தவர். கட்சியை அழிக்க அனைத்து வழிகளிலும் முயற்சி மேற்கொண்டு வருகிறார். சட்டம், ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தி அலுவலகத்தை மூடியது சில்லறைத்தனமானது. ஓபிஎஸ் இந்த முறை தர்மயுத்தம் நடத்த முடியவில்லை. ஒரு தலைவராக இருந்தவர் இதுபோன்ற அராஜக செயலில் ஈடுபட்டது, அவர் மீது இருந்த சிறிய அளவிலான மரியாதை கூட இல்லாமல் போனது. ஜெயலலிதா இருந்து இருந்தால் திமுகவுக்கு நல்லாட்சி சான்றிதழ் ரவீந்திரன் எம்.பி. கொடுத்து இருப்பாரா? என்று கேள்வி எழுப்பினார்.

Chella

Next Post

’நான் ஏற்கனவே பொதுச்செயலாளர்தான்..! தலைவர் என்று நமக்கு நாமே சொல்லிக் கொள்ளக்கூடாது..! - சசிகலா

Wed Jul 13 , 2022
தான் ஏற்கனவே பொதுச்செயலாளர் ஆகிவிட்டதாகவும் எடப்பாடியும், ஓ.பன்னீர்செல்வமும் தற்போது பொதுச்செயலாளர் பதவிக்கு சண்டை போட்டுக் கொள்வதாகவும் சசிகலா தெரிவித்துள்ளார். மயிலாடுதுறை அன்பகம் காப்பகத்தில் இரண்டு கைகளையும் இழந்த மாற்றுத்திறனாளி மாணவி லட்சுமி பிளஸ்2 பொதுத்தேர்வில் வெற்றி பெற்றதை அறிந்த சசிகலா, காப்பகத்திற்கு வருகை தந்து மாணவியைப் பாராட்டினார். பின்னர், மாணவி லட்சுமி தனது கால்களால் வரைந்த ஓவியங்களைப் பார்த்து வியப்படைந்தார். தொடர்ந்து காப்பகத்தில் உள்ள குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கிய அவர், […]
’நான் ஏற்கனவே பொதுச்செயலாளர்தான்..! தலைவர் என்று நமக்கு நாமே சொல்லிக் கொள்ளக்கூடாது..! - சசிகலா

You May Like