சென்னை புழல் மத்தியச் சிறை -1இல் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சென்னை புழல் மத்தியச் சிறை -1இல் உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என சென்னை ஆட்சித் தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.
காலி பணியிடங்கள் ;
- சமையலர் -1 (பொன்னேரி கிளைச்சிறை,
- லாரி ஓட்டுநர் -1 (புழல் மத்தியச் சிறை-1),
- நெசவு போதகர் -1 (புழல் மத்தியச் சிறை-1)
வயது வரம்பு :
சமையலர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 01.07.2024 தேதியின் படி 18 வயது பூர்த்தியடைந்தவராகவும் 34 வயதிற்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.
லாரி ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 01.07.2024 தேதியின் படி 18 வயது பூர்த்தியடைந்தவராகவும், 32 வயதிற்குப்பட்டவராகவும் இருக்க வேண்டும். பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 2 ஆண்டுகளும், எஸ்சி / எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
நெசவு போதகர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 01.07.2024 தேதியின் படி 18 வயது பூர்த்தியடைந்தவராகவும், 32 வயதிற்குப்பட்டவராகவும் இருக்க வேண்டும். பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 2 ஆண்டுகளும், எஸ்சி / எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
என்னென்ன தகுதி ?
- சமையலர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருத்தல் வேண்டும். மேலும் சமையலர் பணியில் குறைந்தபட்சம் 2 ஆண்டு முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
- லாரி ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 8ஆம் வகுப்பு முடித்ததுடன், கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். ஓட்டுநர் பணியில் 1 ஆண்டு முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
- நெசவு போதகர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் தமிழ்நாடு அரசு தேர்வுத்துறையினரால் கைத்தறி நெசவு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் ;
சமையலர் பணிக்கு ரூ.15,900 – ரூ.58,500, லாரி ஓட்டுநர் பணிக்கு ரூ.19,500 – ரூ.71,900, நெசவு போதகர் பணிக்கு ரூ.19,500 – ரூ.71,900 வரை ஊதியமாக வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எப்படி விண்ணப்பிப்பது?
இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் சிறைக் கண்காணிப்பாளர், மத்தியச் சிறை-1, புழல் சென்னை 66, தொலைப்பேசி எண் 044-26590615 என்ற முகவரிக்கு 13.09.2024 தேதிக்குள் வந்து சேரும் படி அனுப்ப வேண்டும். 13ஆம் தேதி மாலை 5 மணிக்கு மேல் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read more ; ஹரியானா தேர்தல்.. அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த ரஞ்சித் சிங் சவுதாலா..!! என்ன விவகாரம்?