அதிமுக பொதுக்குழு நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ள நிலையில் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.. இந்த பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற இரட்டை தலைமையை ரத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.. மேலும், அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்படுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.. மேலும் நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா என்ற விதியும் ரத்து செய்யப்பட்டது.. 4 மாதங்களுக்குள் பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது..
அதிமுக பொருளாளருக்கான அதிகாரம் குறைக்கப்பட்டு, பொதுச்செயலாளருக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.. வங்கி நடவடிக்கைகளில் ஈடுபட பொருளாளருக்கு அதிகாரம் அளிக்க, பொதுச்செயலாளருக்கே அதிகாரம் வழங்கபப்ட்டுள்ளது.. வரவு செலவுகளை ஆராய்தல், நிர்வகித்தல் உள்ளிட்ட பொறுப்புகள் பொதுச் செயலாளர் வசம் செல்கின்றன.. இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக்கோரி கையெழுத்து இடும் அதிகாரம் பொதுச் செயலாளருக்கே வழங்கப்பட்டுள்ளது..