fbpx

Official Announcement: மான்செஸ்டர் யுனைடெட் அணியில் இருந்து ரொனால்டோ அதிரடி நீக்கம்..!!

பிரபல கால்பந்து கிளப்பான மான்செஸ்டர் யுனைடெட் அணியில் இருந்து கிறிஸ்டியானோ ரொனால்டோ அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

கால்பந்து விளையாட்டின் நட்சத்திர வீரர்களில் ஒருவராகத் திகழ்பவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. போர்ச்சுக்கல் நாட்டைச் சேர்ந்த இவர், மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்து கிளப் அணிக்காக விளையாடி வருகிறார். கடந்த 2021ஆம் ஆண்டு, இரண்டு ஆண்டுகள் தனது அணிக்காக விளையாட ரொனால்டோவுடன் மான்செஸ்டர் யுனைட்டெட் ஒப்பந்தம் செய்து கொண்டது. நடப்பு சீசனில் மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக ரொனால்டோ விளையாடவில்லை. இதற்கு அந்த அணியின் பயிற்சியாளர் எரிக் டென் ஹாக் தான் காரணம் என பரவலாக பேசப்பட்டு வந்தது.

Official Announcement: மான்செஸ்டர் யுனைடெட் அணியில் இருந்து ரொனால்டோ அதிரடி நீக்கம்..!!

இதுகுறித்து பேசிய ரொனால்டோ, ‘அவர் ஏன் என்னை மிகவும் மோசமாக விமர்சிக்கிறார் என்று தெரியவில்லை. ஒருவேளை அவர் தனது விளையாட்டு கெரியரை முடித்து விட்ட நிலையில், நான் இன்னும் களத்தில் விளையாடி வருவதும் கூட காரணமாக இருக்கலாம்’ என்று கூறியிருந்தார். இதனையடுத்து, ரொனால்டோவை உடனடியாக மான்செஸ்டர் யுனைடெட் அணியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என அணியின் மேலாளர் தெரிவித்தார். இந்நிலையில், நேற்று மான்செஸ்டர் யுனைடெட் அணியில் இருந்து ரொனால்டோ நீக்கப்பட்டதாக கிளப் நிர்வாகம் அறிவித்தது. கிளப் உரிமையாளர்கள் மற்றும் பயிற்சியாளர் எரிக் டென் ஹாக் ஆகியோரை பரபரப்பாக விமர்சித்ததன் காரணமாக, இருதரப்பினர் இடையே பரஸ்பர நம்பிக்கையின் அடிப்படையில் ஒப்பந்தம் முறித்துக் கொள்ளப்பட்டது.

Chella

Next Post

"நான் தலைகீழாக தான் குதிப்பேன்" என்ற வசனம் போல, பாதிரியார் ஒருவர் "பேனர்" வைத்து அட்டூழியம் செய்து வருகிறார்....

Wed Nov 23 , 2022
மூடநம்பிக்கை என்ற வார்த்தை ஒன்றுக்கு ஆயிர சாட்சிகள் இருக்கு, புதையல் எடுக்க நரபலி கொடுத்த தம்பதியினர் போன்ற மூடநம்பிக்கையால் கொலைகாரர்கள் ஆன பல நிகழ்வுகள் இங்கு நடந்து கொண்டே தான் இருக்கிறது. ஆனால் தொடர்ந்து இதுபோல் குற்றங்கள் பெருகிக்கொண்டே தான் செல்கிறதே தவிர குறைந்ததாக இல்லை. சமீபத்தில் கூட மதுரையில் உடல் நலக்குறைவால் இறந்த மனைவி, ‘உயிர்த்தெழுவார்’ என்ற மூடநம்பிக்கையுடன், அவரது உடலுடன் மூன்று நாட்களாக கணவர் மற்றும் அவரது […]

You May Like