ஓலா நிறுவனம் 500 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது..
எலக்ட்ரிக் வாகனங்களுக்கு கூடுதல் கவனம் செலுத்தப்படுவதாலும், செலவைக் குறைத்து, செயல்பாடுகளை நெறிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, துறைகள் முழுவதும் 500 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய ஓலா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.. இந்த பணிநீக்கம் குறித்து ஓலா மூத்த நிர்வாகிகளிடம் தங்கள் அணிகளில் பணிபுரியும் ஊழியர்களைக் கண்டறியும்படி அந்நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது…
தற்போது, ஓலா அதன் முக்கிய சவாரி வணிகத்தில் கிட்டத்தட்ட 1,100 ஊழியர்களைக் கொண்டுள்ளது.. இதில் கிட்டத்தட்ட 50% பேரை பணியைவிட்டு நீக்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.. இந்த தகவல் அதில் பணிபுரியும் ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..
ஓலா இப்போது தனது மின்சார கார், செல் உற்பத்தி மற்றும் நிதிச் சேவை வணிகங்களில் அதிக முதலீடு செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. சமீபத்தில் எலக்ட்ரிக் வாகனங்களில் ஏற்பட்ட தீ விபத்துகள் காரணமாக தனது மின்சார இருசக்கர வாகனங்களில் உள்ள பேட்டரிகளில் உள்ள பழுதடைந்த பேட்டரிகள் குறித்தும் ஓலா நிறுவனம் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது..
முன்னதாக கடந்த மாதம், ஓலா கார்கள் மற்றும் அதன் விரைவான வர்த்தக வணிகமான ஓலா டாஷ் ஆகியவற்றை அந்நிறுவனம் மூடியது.. மின்சார இரு சக்கர வாகனம் மற்றும் மின்சார கார் ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்துவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.. கிறது. ஓலா இதுவரை ஓலா கஃபே, ஃபுட் பாண்டா, ஓலா ஃபுட்ஸ் மற்றும் இப்போது ஓலா டேஷ் ஆகியவற்றை மூடியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..