fbpx

ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு…! மார்ச் 31, 2023-ம் ஆண்டு வரை நீட்டிப்பு…! மத்திய அரசு

ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை திட்டத்தால் புலம் பெயர்ந்தவர்கள் உள்பட அனைத்து பயனாளர்களும் தங்களது மாதாந்திர உணவு தானியங்களை தற்போதைய ரேஷன் அட்டை அல்லது பயோ மெட்ரிக் அங்கீகாரத்துடனான ஆதார் எண்ணை பயன்படுத்தி நாட்டில் எங்கும் உள்ள நியாய விலைக்கடைகளில் வாங்க முடியும் என்று மத்திய இணையமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி மக்களவையில் தெரிவித்தார்.

ஒருங்கிணைந்த பொது விநியோக மேலாண்மை முறையில் ஏப்ரல் 2018-ம் ஆண்டு ரூ.127.3 கோடிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இத்திட்டம் மார்ச் 31, 2023-ம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுவரை 2020-21, 2021-22 மற்றும் 2022-23 ஆகிய 3 நிதியாண்டுகளின் போது மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள், தேசிய தகவல் மையங்கள், தேசிய தகவல் மையசேவை நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு ரூ.46.86 கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை திட்டத்தின் கீழ் தற்போது மாதந்தோறும் சராசரியாக 3.5 கோடி பரிவர்த்தனைகள் நடைபெற்று வருகின்றன.

இதுவரை மொத்தம் 93.31 கோடி பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளன. இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக 167 பண்பலை வானொலி மற்றும் 91 சமுதாய வானொலி நிலையங்கள், ரயில் நிலையங்களில் ஒலி-ஒளி காட்சி, நியாயவிலைக் கடைகள் மற்றும் வெளியிடங்களில் பதாகைகள் உள்ளிட்டவை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. 13 மொழிகளில் இடம் பெற்றுள்ள ‘மேரா ரேஷன்’ என்ற செயலியை இதுவரை சுமார் 20 லட்சம் பேர் பதிவிறக்கம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

’பேருக்குதான் நான் புருஷன்’..!! எந்நேரமும் ஃபோன்லயே பேசிட்டு இருக்கா..!! காதல் மனைவிக்கு நேர்ந்த சம்பவம்..!!

Thu Dec 15 , 2022
இரவு பகலாக வேறு நபர்களிடம் செல்போனில் பேசிக் கொண்டிருந்த காதல் மனைவியை கணவன் அடித்துக் கொலை செய்த பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் திருமாஞ்சி நகரில் வசித்து வருபவர் ஜான்ராஜ். இவரது மகன் இம்மானுவேல் அப்துல்லா (32). கூலித் தொழிலாளியான இவருக்கு கன்னித்தாய் (30) என்ற மனைவி இருந்தார். இவர்கள் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு செய்யது அலி பாத்திமா […]
’பேருக்குதான் நான் புருஷன்’..!! எந்நேரமும் ஃபோன்லயே பேசிட்டு இருக்கா..!! காதல் மனைவிக்கு நேர்ந்த சம்பவம்..!!

You May Like