தலைவாசல் அருகே ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த விரக்தியில் கல்லூரி மாணவன், விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே சதாசிவபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி சீனிவாசன். இவரது மகன் சூர்யபிரகாஷ். இவர், தேவியாக்குறிச்சியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்த மாணவன், ஆன்லைனில் அடிக்கடி ரம்மி விளையாடி வருவதாக கூறப்படுகிறது. அப்போது, 75 ஆயிரம் ரூபாயை இழந்ததால் மன வேதனையில் இருந்து வந்துள்ளார்.
இதையடுத்து, பணத்தை இழந்த விரக்தியில் மாணவன் சூர்யபிரகாஷ் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனையறித்த பெற்றோர், மாணவனை உடனடியாக மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆபத்தான நிலையில் இருக்கும் மாணவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஆத்தூர் ஊரக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.