fbpx

ஓபன் மகளிர் டென்னிஸ் தொடர்..! இன்று இறுதிப் போட்டி..! ரசிகர்கள் ஆர்வம்..!

சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ் தொடரில் இன்று நடைபெறும் இறுதிப் போட்டிகளை முதலமைச்சர் முக.ஸ்டாலின் பார்வையிட்டு, வெற்றி பெறும் வீராங்கனைகளுக்கு பரிசுகளை வழங்க உள்ளார்.

சர்வதேச ஓபன் மகளிர் டென்னிஸ் தொடர் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டென்னிஸ் மைதானத்தில் கடந்த 12ஆம் தேதி தொடங்கியது. இதில், இந்திய வீராங்கனைகள் வெளியேறிய நிலையில், வெளிநாட்டு வீராங்கனைகள் மட்டுமே இறுதிப் போட்டியில் விளையாட உள்ளனர். இந்நிலையில், இன்று மாலை 5 மணிக்கு தொடங்கும் இறுதிப் போட்டிகளை முதலமைச்சர் முக.ஸ்டாலின் நேரில் கலந்து கொண்டு பார்வையிடுகிறார். பின்னர் வெற்றி பெற உள்ள வீராங்கனைகளுக்கு பரிசுகள் மற்றும் பரிசுத் தொகைகளை வழங்க உள்ளார்.

ஓபன் மகளிர் டென்னிஸ் தொடர்..! இன்று இறுதிப் போட்டி..! ரசிகர்கள் ஆர்வம்..!

இறுதி போட்டிகளில், ஒற்றையர் பிரிவில் போலந்து வீராங்கனை மேக்டா லினெட் மற்றும் செக் குடியரசு வீராங்கனையான லிண்டா ஃப்ரூவிர்டோவா மோத உள்ளனர். இரட்டையர் பிரிவு இறுதிப் போட்டியில் கனடாவின் தாப்ரோஸ்கி, பிரேசிலின் லூசியா ஸ்டேபனி ஜோடியினர், ரஷ்யாவின் அன்னா பிளிங்கோவா, ஜார்ஜியாவின் நடேலா டிசலமிட்ஜ் ஜோடியுடன் களம் காண்கின்றனர். சாம்பியன் பட்டம் வெல்லும் வெற்றியாளர்கள் மற்றும் பங்கேற்பாளர்களுக்கு கோப்பைகளும், 2 கோடி ரூபாய் மதிப்பிலான பரிசுத் தொகையும் வழங்கப்பட இருக்கிறது.

Chella

Next Post

அரசு மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடு..? அமைச்சர் மா.சுப்பிரமணியன் பரபரப்பு தகவல்..!

Sun Sep 18 , 2022
தமிழக அரசு மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடு இல்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக பல்வேறு புகார்கள் எழுந்தன. இந்த சூழ்நிலையில் தமிழகத்தில் மருந்துகள் கையிருப்பு மற்றும் கொள்முதல் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் சென்னை எழும்பூரில் உள்ள தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழக அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்திற்கு […]

You May Like