fbpx

’திமுகவின் பீ டீமாக செயல்பட்டு அதிமுகவுக்கு துரோகம் செய்தவர் ஓபிஎஸ்’..! எடப்பாடி பழனிசாமி காட்டம்..!

இலங்கையில் குடும்ப ஆட்சி நடத்திய ராஜபக்சே குடும்பத்தினர் எப்படி நாட்டை விட்டு சென்றுள்ளார்களோ, அதேபோல் விரைவில் இந்த திமுகவினரும் செல்வார்கள் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பின் முதல்முறையாக கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர் பேட்டை வருகை தந்துள்ளார். அவரை கள்ளக்குறிச்சி அதிமுக மாவட்ட செயலாளர் இரா.குமரகுரு தலைமையிலான அதிமுக-வினர் மேளதாளத்துடன் மலர்கள் தூவி உற்சாகத்துடன் சிறப்பான வரவேற்பு அளித்தனர். இதனைத் தொடர்ந்து தொண்டர்கள் மத்தியில் பேசிய எடப்பாடி பழனிசாமி, ”அதிமுகவுக்கு ஒற்றை தலைமை வேண்டும் என்ற தொண்டர்களின் முழக்கத்தால் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் உங்கள் ஆதரவோடு பயணத்தை தொடர, எனக்கு வாய்ப்பளித்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

’திமுகவின் பீ டீமாக செயல்பட்டு அதிமுகவுக்கு துரோகம் செய்தவர் ஓபிஎஸ்’..! எடப்பாடி பழனிசாமி காட்டம்..!

பின்னர், சில பேர் நம்முடைய இயக்கத்தில் இருந்து கொண்டு அதிமுகவை அழிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். சில பேர் செய்த சதியினால் தான் கடந்த சட்டமன்ற தேர்தலில் நம்மால் ஆட்சியை பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இன்றைக்கு யார் யாரெல்லாம் ஆட்சிக்கு வருவதற்கு தடையாக இருந்தாரோ அந்த தடை கற்கள் எல்லாம் உடைத்து எறியப்பட்டுள்ளது. அடுத்த ஆட்சிக்கு இந்த கூட்டமே சாட்சி. எத்தனை சோதனைகள் வந்தாலும் அதை தாண்டி வெற்றி வாகை சூடுவோம். தமிழகத்தை ஆட்சி செய்து வரும் ஸ்டாலின் அதிமுகவை முடக்க பார்க்கிறார். இன்றைக்கு நமது துரோகிகளோடு சேர்ந்து கொண்டு எம்ஜிஆர் மாளிகையை சீல் வைத்திருக்கின்றார்கள். தமிழகத்தில் அதிகமுறை ஆட்சியில் இருந்த ஒரே கட்சி அதிமுக தான். அதேபோல் தமிழகத்தின் மிக நீண்ட காலம் எதிர்க்கட்சியாக இருந்ததும் அதிமுக தான்.

’திமுகவின் பீ டீமாக செயல்பட்டு அதிமுகவுக்கு துரோகம் செய்தவர் ஓபிஎஸ்’..! எடப்பாடி பழனிசாமி காட்டம்..!

தற்போது தமிழகத்தில் நடைபெற்று வருவது திமுகவின் சட்ட ஒழுங்கு சீர்கெட்ட ஆட்சியாகும். அதிமுகவுக்கு துரோகம் செய்த பன்னீர்செல்வம் திமுகவின் பீ டீமாக செயல்படுகிறார். எம்ஜிஆர் ஆல் துவங்கப்பட்ட அதிமுகவை சில துரோகிகள் அழிக்க நினைத்தால் அவர்கள் அழிந்து விடுவார்கள். இலங்கையில் குடும்ப ஆட்சி நடத்திய ராஜபக்சே குடும்பத்தினர் எப்படி அந்த நாட்டு மக்களின் எதிர்ப்பால் நாட்டை விட்டு சென்று உள்ளார்களோ, அதே போல் விரைவில் இந்த திமுகவினரும் செல்வார்கள். அதிமுக தொண்டர்களால் ஆன கட்சி. தொண்டர்கள் நினைத்ததால் தான், நான் தற்பொழுது இடைக்கால பொதுச்செயலாளராக ஆனேன் என்று தெரிவித்தார்.

Chella

Next Post

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் எப்போது..? - அமைச்சர் அன்பில் மகேஷ் பதில்

Fri Jul 15 , 2022
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம் ரத்து செய்யப்படவில்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். சென்னை வேளச்சேரியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் பிறந்தநாள் விழாவில் பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அதிகாரிகள் காகர்லா உஷா, நந்தகுமார், அறிவொளி, எம்.எல்.ஏ., ஹசன் மௌலானா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது, பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், […]
ஆபத்து..!! மாணவர்களுக்கு இலவச லேப்டாப்..!! இணையத்தில் வைரலாகும் லிங்க்..!! உண்மை இதுதான்..!!

You May Like