fbpx

ஓபிஎஸ் மகனை அதிமுக எம்.பியாக கருதக்கூடாது.. மக்களவை சபாநாயகருக்கு இபிஎஸ் கடிதம்…

ஓபிஎஸ் மகனை அதிமுக எம்.பியாக கருத வேண்டாம் என்று எடப்பாடி பழனிசாமி மக்களவை சபாநாயகருக்கு கடிதம் எழுதி உள்ளார்

பல சர்ச்சைகளுக்கும் பரபரப்புக்கும் இடையே சென்னை வானகரத்தில் கடந்த 11-ம் தேதி, அதிமுக பொதுக்குழு செயற்குழு கூட்டம் நடைபெற்றது.. இதில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயாளராக தேர்வு செய்யப்பட்டார். இதை தொடர்ந்து அதிமுக கட்சி விதிகள், கொள்கை, கோட்பாடுகளுக்கு எதிராக செயல்பட்டதால் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். ஆனால், அதிமுகவில் இருந்து ஓபிஎஸ்-ஐ நீக்குவதாக பொதுக்குழுவில் அறிவிக்கப்பட்ட நிலையில், இபிஎஸ்-ஐ நீக்குவதாக ஓபிஎஸ் அறிவித்திருந்தார்..

இதனிடையே சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத்தலைவராக ஆர்.பி. உதயகுமார் நியமிக்கப்பட்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.. இதன் மூலம் ஓ.பன்னீர்செல்வத்திடம் இருந்த எதிர்க்கட்சி துணை தலைவர் பதவியும் பறிக்கப்பட்டது..

இந்நிலையில் ஓபிஎஸ் மகனை அதிமுக எம்.பியாக கருத வேண்டாம் என்று எடப்பாடி பழனிசாமி மக்களவை சபாநாயகருக்கு கடிதம் எழுதி உள்ளார்.. கட்சியில் இருந்து நீக்கியதால் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்தை அதிமுக எம்.பியாக கருதக் கூடாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.. அதிமுகவுக்கு மக்களவையில் ஒரே ஒரு எம்.பி உள்ள நிலையில் மக்களவை சபாநாயகருக்கு எடப்பாடி பழனிசாமி இந்த கடித்தை எழுதி உள்ளார்..

ஆனால் அதிமுகவில் இருந்து தன்னை நீக்கியது செல்லாது என்று ரவீந்திரநாத்தும் மக்களவை சபாநாயகருக்கு பதில் கடிதம் எழுதி உள்ளார். தற்போது உட்கட்சி விவகாரம் தொடர்பாக நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளது என்றும், தேர்தல் ஆணையத்தில் முறையீடு செய்துள்ளதாகவும் ரவீந்திரநாத் கூறியுள்ளார்.. எனவே எடப்பாடி பழனிசாமியின் கடிதத்தை ஏற்கக்கூடாது என்றும் ரவீந்திரநாத் கூறியுள்ளார்..

Maha

Next Post

மக்களே கவனம்.. 19 மாவட்டங்களில் இன்று கனமழை வெளுத்து வாங்கும்... வானிலை மையம் எச்சரிக்கை...

Thu Jul 21 , 2022
நீலகிரி, கோவை, திருப்பூர்‌ உள்ளிட்ட 19 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ” தமிழக பகுதிகளின்‌ மேல்‌ நிலவும்‌ வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, கோவை, திருப்பூர்‌, தேனி, திண்டுக்கல்‌, ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம்‌, […]
அடுத்த 2 நாட்களுக்கு கனமழை..! பலத்த சூறாவளிக்காற்று.. மீனவர்களுக்கு எச்சரிக்கை..!

You May Like