fbpx

மாணவர்களின் வீடுகளில் ஆக.11 முதல் 17 வரை தேசியக்கொடி ஏற்ற உத்தரவு..! உயர்கல்வித்துறை சுற்றறிக்கை

பள்ளி, கல்லூரி மாணவர்களின் வீடுகளில் ஆகஸ்ட் 11ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை தேசியக்கொடி ஏற்ற வேண்டும் என உயர்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

இந்தியா சுதந்திரம் அடைந்து ஆகஸ்டு 15ஆம் தேதியுடன் 75-வது ஆண்டுகள் ஆகிறது. இதையொட்டி இந்த ஆண்டு சுதந்திர தின பவள விழாவை கோலாகலமாக கொண்டாட மத்திய அரசும், மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், சுதந்திர தின பவள விழாவையொட்டி கர்நாடக உயர்கல்வித்துறை அமைச்சர் அஸ்வத் நாராயண், அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும், கல்லூரி மற்றும் தொழில்நுட்பக் கல்வித் துறையின் கீழ் உள்ள கல்வி நிறுவனங்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.

India Flag Waving Slow Motion Against Stock Footage Video (100%  Royalty-free) 15304903 | Shutterstock

அதில், “75-வது சுதந்திர தினத்தை அனைத்து தரப்பு மக்களும் உற்சாகமாக கொண்டாடும் வகையில் நடவடிக்கை எடுக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, 75-வது சுதந்திர தின விழாவை சிறப்பிக்கும் வகையில் பள்ளி, கல்லூரிகள் உள்பட அனைத்து கல்வி நிறுவனங்களில் படித்து வரும் மாணவ-மாணவிகள் அனைவரின் வீடுகளிலும் ஆகஸ்டு 11 முதல் 17ஆம் தேதி வரை மூவர்ண தேசியக் கொடி ஏற்ற வேண்டும். மேலும், மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழகங்களின் கீழ் வரும் அனைத்து கல்லூரிகள் மற்றும் நிறுவனங்கள் மற்றும் டி.சி.டி.இ.யின் கீழ் உள்ள அரசு, உதவி பெறும், உதவிபெறாத கல்லூரிகள், டிப்ளமோ கல்லூரிகள் நமது தேசியக்கொடியை ஏற்றி தங்கள் தேசிய பெருமையை வெளிப்படுத்த வேண்டும். இதுகுறித்து மாணவ-மாணவிகளுக்கு தெரியப்படுத்தவும், அந்தந்த கல்வி நிர்வாகங்கள், அறிவிப்பு பலகையில் தகவல்களை வெளியிட வேண்டும்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

#Breaking.. மால்கள், தியேட்டர், கடைகள்.. இது கட்டாயம்... சென்னையில் புதிய கட்டுப்பாடு...

Mon Jul 4 , 2022
சென்னையில் பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்று மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு மீண்டும் வேகமெடுத்துள்ளது.. அந்த வகையில் இந்தியாவில் சராசரி ஒரு நாள் பாதிப்பு 15,000-க்கும் மேல் பதிவாகி வருகிறது.. எனவே கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்கவும், உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் மாநில அரசுகளை மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது.. இதனிடையே தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.. கடந்த சில நாட்களாக […]
தியேட்டர்கள்

You May Like