நீங்கள் 30 வயசுக்கு மேல் திருமணம் செய்து கொள்ள நினைத்தால் கண்டிப்பாக சில விஷயங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அவை என்ன என்பதைக் குறித்து இங்கு பார்க்கலாம்.
காலம் காலங்காலமாக திருமணம் செய்து கொள்வதற்கான சரியான வயது என்ன என்ற விவாதம் தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கிறது. சில வீடுகளில் 20 முதல் 25 வயதுக்குள் தங்கள் பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைக்கிறார்கள். ஆனால், இக்காலத்தலைமுறையினர் நிறைய படித்து, நல்ல வேலைக்கு சென்று வாழ்க்கையில் நல்ல நிலைக்கு வந்தப் பிறகுதான் திருமணம் செய்து கொள்கிறார்கள். இதனால் அவர்களது வயது 30யை கடந்துவிடுகிறது.
பொதுவாகவே 20ல் திருமணம் செய்து கொள்பவருக்கும் 30ல் திருமணம் செய்து கொள்பவர்களுக்கும் நிறைய வித்தியாசம் உண்டு. ஏனெனில் 30 வயது என்பது ஒரு மனிதனின் விடலை பருவம் முடிந்து அவன் மனமுதிர்ச்சியடைந்து வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு செல்லும் வயது இது. அதிலும் குறிப்பாக நீங்கள் 30 வயசுக்கு மேல் திருமணம் செய்து கொள்ள நினைத்தால் கண்டிப்பாக சில விஷயங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அவை என்ன என்பதைக் குறித்து இங்கு பார்க்கலாம்.
பொதுவாகவே 30 வயதை கடந்தவர்களுக்கு தங்களுக்கு என்ன தேவை என்ற தெளிவு அவர்களிடம் இருக்கும். அதிலும் குறிப்பாக அவர்கள் தங்களது 30 வயது வரை நிறைய நண்பர்களை சந்தித்து இருப்பார்கள். மேலும் அவர்களை நன்கு புரிந்திருப்பார்கள். இது அவர்களின் வாழ்க்கை துணையை எளிதாகப் புரிந்து கொள்ள பெரிதும் உதவுகிறது.
30 வயது கடந்தவர்களுக்கு வாழ்க்கையை புரிந்து கொண்டு அதற்கேற்ப வாழ்வதற்கான மனப்பக்குவம் அவர்களுக்கு நிறையவே இருக்கும். இதனால் திருமணத்திற்கு பிறகு அவர்கள் தங்களது வாழ்க்கையில் எவ்வளவு பெரிய நெளிவு சுளிவுகள் ஏற்றம் இறக்கங்கள் வந்தாலும் அவற்றை பக்குவமாக கடந்து செல்வார்கள். ஆனால் இந்த மனப்பக்குவம் 20 வயதுடையவர்களுக்கு இருக்காது.
பொதுவாகவே, 30 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு பயாலாஜிக்கில் கிளாக்கில் நிறைய மாற்றங்கள் ஏற்படும். நீங்கள் மனதில் உறுதியுடன் இருந்தால் இப்பிரச்சினையை நீங்கள் எளிதில் சமாளிக்கலாம். ஏனெனில் 30 வயதுக்கு மேல் திருமணம் செய்து கொள்பவர்களுக்கு குழந்தை பெற்றுக் கொள்வதில் சிரமங்கள் ஏற்படும். சொல்லப்போனால் கருத்தரிப்பது கடினம். ஒருவேளை கருத்தரித்தால் சுகப்பிரசவம் உண்டாவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு. இன்றைய காலத்தில் முப்பது வயதிற்கு மேல் திருமணம் செய்து கொள்பவர்களுக்கு சிசேரியன்தான் அதிகம் நடக்கிறது.
பொதுவாகவே 20 வயதில் திருமணம் செய்து கொள்பவர்கள் தங்களுடைய வேலையையும், வீட்டையும் கவனிப்பதில் மிகவும் சிரமத்தை எதிர்கொள்கிறார்கள். ஆனால் 30 வயதினருக்கு அவ்வாறு இல்லை. ஏனெனில், அவர்களின் மனம் மிகவும் தெளிவாக இருப்பதால், அவர்கள் தங்களுடைய எதிர்காலம் திட்டம் மற்றும் தற்போதைய நிலை எல்லாவற்றையும் புரிந்து கொண்டு, அதற்கேற்ப தங்களுடைய தொழிலையும், குடும்பத்தையும் ஒரே நேரத்தில் சிறப்பாக கையாளும் திறமை அவர்களுக்கு அதிகம் உண்டு.