மத்தியப் பிரதேசத்தில் இன்று இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானங்கள் மோதி விபத்துக்குள்ளானது..
இந்திய விமானப்படையின் குவாலியர் தளத்தில் இருந்து வழக்கமான பயணத்திற்காக விமானங்கள் புறப்பட்டதாக கூறப்படுகிறது.. ஆனால் மத்திய பிரதேசத்தின் மொரேனே என்ற பகுதியில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான சுகோய்-30 மற்றும் மிராஜ் 2000 ஆகிய விமானங்கள் விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது.. எனினும் விமானத்தை ஓட்டி சென்ற . இரண்டு விமானிகளும் உயிருடன் இருப்பதாகவும், மருத்துவ உதவிக்காக அழைத்துச் செல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இரண்டு விமானங்களும் நடு வானில் மோதியிருக்கலாம் என முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் நடுவானில் விபத்து நடந்ததா இல்லையா என்பதை IAF விசாரணை நீதிமன்றம் உறுதி செய்யும் கூறப்படுகிறது.. இந்த விபத்தின் போது மிராஜ் 2000 விமானத்தில் ஒரு விமானியும், Su-30 இல் 2 விமானிகள் இருந்ததாக கூறப்படுகிறது.. எனினும் 3வது விமானி இருக்கும் இடத்தை கண்டறிய இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.. அதன்பிறகே 3-வது விமானியின் நிலை என்ன என்பது தெரியவரும்..
இந்த விபத்து குறித்து விமானப்படைத் தளபதி ஏர் சீஃப் மார்ஷல் விஆர் சவுதாரி பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. IAF விமானிகளின் உடல்நிலை குறித்து கேட்டறிந்த பாதுகாப்பு அமைச்சர், இந்த தொடர்பான விசாரணையை உன்னிப்பாக கவனித்து வருவதாக கூறப்பட்டுள்ளது..
இதற்கிடையில், ராஜஸ்தானின் பரத்பூரில் இருந்து மற்றொரு விமான விபத்து நடந்துள்ளது.