fbpx

பெற்றோர்களே..!! உங்கள் பெண் குழந்தைகளுக்கு ரூ.50,000 தரும் தமிழ்நாடு அரசு..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!

பெண் குழந்தைகள் மற்றும் பெண்களின் முன்னேற்றத்திற்காக தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், பெண் குழந்தைகள் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெறும் பொருட்டு முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சமூக நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தில் குழந்தைகளுக்கான வைப்புத் தொகையை அரசே செலுத்தும். குழந்தைகளுக்கு 18 வயது பூர்த்தியடைந்த உடன் முதிர்வு தொகையை விண்ணப்பித்து பெற்றுக் கொள்ள முடியும்.

இத்திட்டத்தின்படி, ஒரு பெண் குழந்தை மட்டுமிருந்தால் தலா ரூ.50,000, இரண்டு பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 என வழங்கப்படுகிறது. 18 வயது நிறைவடைந்த பின், இத்திட்டத்தின் முதிர்வு தொகை மற்றும் வட்டி தொகை உடன் சேர்த்து பயனாளிகளுக்கு வழங்கப்படுகிறது. இரண்டாவது குழந்தை பிறந்து 3 ஆண்டுகளுக்குள் இருந்தால், முதல்வரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் விண்ணப்பிக்க முடியும்.

குழந்தையின் தாயார் 35 வயதுக்கு குடும்ப நல அறுவை சிகிச்சை செய்திருக்க வேண்டும். குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ.72,000 வரை இருக்க வேண்டும். அதற்கான வருமான சான்றிதழ் சமர்ப்பிக்கப்பட வேண்டும். இருப்பிட சான்று மற்றும் ஆண் வாரிசு இல்லை என்பதற்கான சான்றுகளையும் சமர்பிக்க வேண்டும். மேலே குறிப்பிட்ட சான்றுகளுடன் தகுதியான அனைத்து பயனாளிகளும் சம்மந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் அல்லது மண்டல அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம். அல்லது ஆட்சியரிடமும் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம்.

முதல்வரின் 2 பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் ஏற்கனவே விண்ணப்பித்து, வைப்பு நிதி பத்திரம் பெற்றுள்ள பயனாளிகளில் 18 வயது பூர்த்தியடைந்த பயனாளிகள் முதிர்வு தொகையை பெற விண்ணப்பிக்க வேண்டும். சம்மந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் அல்லது மண்டல அலுவலகங்களில் உள்ள சமூக நல விரிவு அலுவலர் அல்லது மகளிர் ஊர்நல அலுவலரிட உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.

முதிர்வு தொகையை பெற தமிழ்நாடு மின்விசை நிதி நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்ட ரசீது நகல், 10ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் நகல், வங்கிக்கணக்கு புத்தக நகல், பயனாளியின் புகைப்படம் ஆகியவற்றை சம்மந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரியும் சமூக நல விரிவாக்க அலுவலர் அல்லது மகளிர் ஊர்நல அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும். மேலும், விவரங்களுக்கு ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சமூகநல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

Read More : ரேஷன் அட்டைதாரர்களுக்கு செம குட் நியூஸ்..!! அனைத்து விவரங்களும் இனி உங்கள் கையில்..!! உடனே இந்த வேலையை முடிங்க..!!

English Summary

A project called Chief Minister’s Girl Child Protection Scheme is being implemented to ensure that girl children pass 10th standard.

Chella

Next Post

மாற்றுத்திறனாளிகளுக்கு வரும் 10-ம் தேதி சிறப்பு குறைதீர்க்கும் முகாம்...!

Tue Oct 8 , 2024
Special grievance redressal camp for differently abled persons on 10th

You May Like