நாட்டின் மிகப்பெரிய போக்குவரத்து முறையாக இந்திய ரயில்வே உள்ளது.. டிக்கெட் விலை குறைவு, வசதியான பயணம் போன்றவை காரணமாக பெரும்பாலான மக்கள் ரயில் பயணங்களை தேர்வு செய்கின்றனர்.. மேலும் பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு இந்திய ரயில்வே விதிகளில் பல மாற்றம் செய்யப்பட்டுள்ளது..
ரயில்வேயின் புதிய விதிகளின்படி, இப்போது உங்கள் இருக்கையிலோ, பெட்டியிலோ அல்லது கோச்சிலோ எந்தப் பயணிகளும் மொபைலில் உரத்த குரலில் பேசவோ, உரத்த குரலில் பாடல்களைக் கேட்கவோ முடியாது. பயணிகளின் தூக்கம் கெடாமல் இருக்கவும், பயணத்தின் போது நிம்மதியாக தூங்கவும் ரயில்வே புதிய வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது.
ரயில்கள் பயனிக்கும் ஒரு சில பயணிகள் இரவு வரை தொலைபேசியில் சத்தமாகப் பேசுகிறார்கள் அல்லது பாடல்களைக் கேட்பதாக மற்ற பயணிகள் அடிக்கடி புகார் கூறுகின்றனர். ரயில்வே துணை அல்லது பராமரிப்பு ஊழியர்களும் சத்தமாக பேசுவதாகவும் சில பயணிகள் புகார் தெரிவித்தனர். இதுதவிர பல பயணிகள் இரவு 10 மணிக்கு மேல் மின்விளக்குகளை எரிய வைப்பதால் மற்றவர்களின் தூக்கம் கெடுவதாகவும் புகார் அளித்துள்ளனர். இதைக் கருத்தில் கொண்டு ரயில்வே புதிய விதியை வகுத்துள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில், எந்த பயணிகளும் விதிகளை பின்பற்றவில்லை என்றால், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
ரயிலில் பயணம் செய்யும் போது இரவு 10 மணிக்கு மேல் மொபைலில் வேகமாக பேசினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது. புதிய விதிகளின்படி, இரவுப் பயணத்தின் போது பயணிகள் சத்தமாகப் பேசவோ, இசையைக் கேட்கவோ முடியாது.