fbpx

பயணிகளே..!! இன்று இரவு முதலே கோயம்பேட்டில் பஸ் ஏறலாம்..!! ஆம்னி பேருந்து நிறுவனங்கள் அறிவிப்பு..!!

கோயம்பேடு தனியார் பேருந்து முனையத்தில் இருந்து பேருந்துகளை இயக்க உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ள நிலையில், இன்று இரவு முதல் கோயம்பேட்டில் இருந்து தனியார் பேருந்துகள் இயக்கப்படும் என பேருந்து உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தென் மாவட்டங்களுக்கு செல்லும் அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தின் அனைத்து பேருந்துகளும் கிளாம்பாக்கத்தில் இருந்து மட்டுமே இயக்கப்படுகின்றன. அதேபோல ஆம்னி பேருந்துகளும் கிளாம்பாக்கத்தில் இருந்துதான் இயங்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. ஆனால், இதற்கு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

அதில், ‘இந்த வழக்கு முடியும் வரை கோயம்பேட்டிலிருந்து ஆம்னி பேருந்துகளை இயக்க அனுமதிக்க வேண்டும்’ எனத் தெரிவித்திருந்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணையில், தமிழ்நாடு அரசு சார்பில், “ஆம்னி பேருந்துகளின் கேரேஜ்கள் கோயம்பேட்டில் இருப்பதால், தற்போதைக்கு சூரப்பட்டு, போரூர், தாம்பரத்தில் பயணிகளை ஏற்றி இறக்க அனுமதிக்கப்படும். பெருங்களத்தூரில் பயணிகளை இறக்கிவிட மட்டும் அனுமதி வழங்கப்படும்” என விளக்கமளிக்கப்பட்டது.

இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி, “சென்னைக்கு உள்ளேயே பயணிகளை ஏற்றிச் செல்ல அனுமதி வழங்கினால், பேருந்து கிளாம்பாக்கம் செல்வதற்கு முன்னதாகவே இருக்கைகள் நிரம்பிவிடும். எனவே, கிளாம்பாக்கத்தில் பேருந்து முனையம் கொண்டு வந்ததன் நோக்கமே வீணாகிவிடும்” எனத் தெரிவித்துள்ளார். மேலும், ஆம்னி பேருந்துகள் செல்ல அனுமதிக்கப்பட்ட வழித்தட வரைபடத்தை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, இந்த வழக்கு விசாரணையை பிப்.9ஆம் தேதிக்கு ஒத்திவைத்திருந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, “கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே ஆம்னி பேருந்து பணிமனைகளை ஏற்கனவே மக்கள் பயன்படுத்தியுள்ளனர். அதனால், மறு உத்தரவு வரும் வரை கோயம்பேடு ஆம்னி பேருந்து பணிமனைகளில் பயணிகளை ஏற்றி இறக்கலாம்” என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், இன்று இரவு 8 மணி முதல் கோயம்பேடு தனியார் பேருந்து முனையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும் என்றும், கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையம் அருகே உள்ள புக்கிங் அலுவலகங்களில் இருந்து பயணிகள் ஏறிக்கொள்ளலாம் எனவும் தனியார் பேருந்துகளின் உரிமையாளர்கள் கூறியுள்ளனர்.

ஆம்னி பேருந்துகள் கோயம்பட்டில் இருந்து இயக்க முடியும் எனில், கிளாம்பாக்கத்திற்கு மின்சார ரயில், மெட்ரோ உள்ளிட்டவை வரும் வரை அரசு பேருந்துகளையும் இங்கிருந்தே இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Chella

Next Post

18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கும் பான் கார்டு!… எப்படி பெறுவது?

Sat Feb 10 , 2024
பான் கார்டை 18 வயது நிறைவடைந்த நபர்கள் மட்டுமல்லாது, 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் வரை பெறலாம்.ஒரே விஷயம் என்னவென்றால், இங்கே, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் சார்பாக பான் கார்டுக்கு விண்ணப்பிக்க வேண்டும். PAN கார்டுக்கு விண்ணப்பிப்பது எப்படி? என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம். முதலில் NSDL இன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்குச் செல்ல வேண்டும். மைனர் வயது சான்று மற்றும் பெற்றோரின் புகைப்படம் போன்ற பிற முக்கிய ஆவணங்கள் […]

You May Like