fbpx

அரசுப் போக்குவரத்து பணியாளர்களுக்கு ஓய்வூதியம்..!! முதலமைச்சர் முக.ஸ்டாலின் உத்தரவு..!!

அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் மக்களுக்கான அத்தியாவசியப் பேருந்து சேவைகளை குறைந்த கட்டணத்தில் வழங்கி வருவதோடு, அனைத்து கிராமப் பகுதிகளுக்கும் பேருந்து பயண வசதியை ஏற்படுத்தி தடையற்ற போக்குவரத்து சேவையை தமிழ்நாடு அரசு வழங்கி வருகிறது. அத்துடன் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர், அரசு கல்லூரிகள் மற்றும் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் மாணவ-மாணவியர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கு இலவச பேருந்து பயணச் சலுகை போன்ற பல்வேறு திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், தமிழ்நாடு அரசின் சாதாரண நகர கட்டண பேருந்துகளில் மகளிர் கட்டணமில்லாமல் பயணம் மேற்கொள்வதற்காக “மகளிர் கட்டணமில்லா பயலாம்” என்ற முத்தான திட்டம் 7.5.2021 அன்று முதலமைச்சராக பொறுப்பேற்றவுடன் முக.ஸ்டாலின் முதல் கையெழுத்திடப்பட்டு, சிறப்பாக இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் வாழ்வு வளம்பெற இந்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் கடும் நிதி நெருக்கடியிலும், தொழிலாளர்களின் நலனில் அக்கறை கொண்டு, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் கடந்த ஏப்ரல் 2022 முதல் நவம்பர் 2022 வரை பணிபுரிந்து ஓய்வு பெற்ற விருப்பு ஓய்வு பெற்ற மற்றும் உயிரிழந்த பணியாளர்கள் என மொத்தம் 3,414 நபர்களுக்கு வருங்கால வைப்புநிதி பணிக்கொடை விடுப்பு ஒப்படைப்புத் தொகை மற்றும் ஓய்வூதிய ஒப்படைப்புத் தொகை உள்ளிட்ட பணப் பலன்களுக்காக ரூ.1,031. 32 கோடி நிதி ஒதுக்கி முதலமைச்சர் முக.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

Chella

Next Post

’அடுக்குமாடி குடியிருப்புக்குள் ரயில் சேவை’..!! இது எங்கு இருக்கு தெரியுமா..? வாயை பிளக்க வைக்கும் வீடியோ..!!

Fri Mar 31 , 2023
சீனாவின் மைய பகுதியில் அமைந்துள்ள பரபரப்பான நகரம் Chongqing. இங்கு சுமார் 30 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். ஆகையால், இது உலகின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றாக இருக்கிறது. இந்த நகரம் வானளாவிய கட்டிடங்கள் மற்றும் நெரிசல்களுக்கு மத்தியில் ஒரு தனித்துவமான ஈர்ப்பை கொண்டிருக்கிறது. அது என்னவென்றால் ரயில் போக்குவரத்து தான். நகரங்களில் வேலை பார்க்கும் பெரும்பாலானோர் வேலைக்கு செல்ல மெட்ரோ ரயில்வே ஸ்டேஷனுக்கு செல்வது வழக்கமான ஒன்று. அது […]
’அடுக்குமாடி குடியிருப்புக்குள் ரயில் சேவை’..!! இது எங்கு இருக்கு தெரியுமா..? வாயை பிளக்க வைக்கும் வீடியோ..!!

You May Like