fbpx

மக்களே..!! சிக்கன் பிரியாணி சாப்பிடும்போது கவனம்..!! திருவாரூரில் அதிர்ச்சி..!!

திருவாரூர் மாவட்டம் குடவாசலில் பேருந்து நிலையத்திற்கு எதிர்புறம் முனியாண்டி விலாஸ் என்ற அசைவ உணவகம் உள்ளது. இதில், கீழப்பாளையூர் பகுதியைச் சேர்ந்த வீரையன் (64), மஞ்சக்குடி முருகேசன் (50), மேல உத்தரங்குடியைச் சேர்ந்த ராமச்சந்திரன் (60) ஆகிய மூவரும் மதிய உணவாக சிக்கன் பிரியாணி சாப்பிட்டனர். அன்றிரவு அவர்களில் வீரையனுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது.

இடைவிடாத வயிற்றுப்போக்கு காரணமாக குடவாசல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு நினைவு தவறும் சூழல் ஏற்பட்டுள்ளது. அதனால் உடனடியாக அவரை திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். அவரைப் போலவே அவருடன் பிரியாணி சாப்பிட்ட மற்ற இருவருக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டு அவர்களும் குடவாசல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருவாரூருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அங்கு அவர்கள் 3 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு உடல் நலம் தேறினர். இது குறித்த புகாரின் பேரில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அந்த உணவகத்தில் சோதனை நடத்தி இறைச்சி மற்றும் உணவை மாதிரிக்காக எடுத்துச் சென்றுள்ளனர். பிரியாணி சாப்பிட்டவர்களுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ள சம்பவம் குடவாசல் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Chella

Next Post

10ஆம் வகுப்பு மாணவனை பலாத்காரம் செய்து மதம் மாற சொன்ன ஆசிரியை..!! அதிர்ச்சி சம்பவம்..!!

Mon Nov 20 , 2023
உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள உன்னாவ் மாவட்டத்தைச் சேர்ந்த 10ஆம் வகுப்பு மாணவனை பெண் ஆசிரியை பாலியல் உறவு கொள்ள வற்புறுத்தியதாகவும், பின்னர் தனது மதத்திற்கு மாறுமாறு அழுத்தம் கொடுத்ததாகவும் அவனது பெற்றோர் தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்தனர். அத்துடன், இந்த விவகாரத்தை ரகசியமாக வைத்திருக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர். இதுகுறித்த புகாரின்பேரில், பெண் ஆசிரியை மீது கன்டோமென்ட் பகுதி போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் அதிருப்தியடைந்த மாணவனின் பெற்றோர், சட்டரீதியாக இப்பிரச்சினையை […]

You May Like