இந்தியாவில் பல்வேறு இடங்களில் காய்ச்சல் பரவல் அதிகரித்து வருகிறது.. காய்ச்சல், இருமல் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகளைக் காட்டும் காய்ச்சலால் நாட்டில் நிறைய பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த அறிகுறிகளில் ஏதேனும் இருந்தால், எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும், விரைவில் மருத்துவரை அணுக வேண்டும் என்றும் மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.. இந்தியாவில் தற்போது 3 வகை காய்ச்சல் பரவி வருகிறது.. இந்த காய்ச்சல் மருத்துவர்களையே குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது..
முதல் வகை – H3N2 வைரஸ் காய்ச்சல்
- டிசம்பர் 15ஆம் தேதிக்குப் பிறகு இந்த H3N2 வைரஸ் பாதிப்பு காரணமாக கிட்டத்தட்ட 50% பேர் பாதிப்பு பதிவாகி உள்ளது..
- நாடு முழுவதும் இந்த காய்ச்சல் பாதிப்பு பதிவாகி உள்ளது..
- குழந்தைகள் மற்றும் முதியவர்கள் இந்த வைரஸால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
- H3N2 வைரஸால் நாட்டில் இதுவரை 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
2-வது வகை – அடினோவைரஸ் காய்ச்சல்
- இது டெல்லி உட்பட வட இந்தியா முழுவதும் பரவியுள்ளது.
- குறிப்பாக மேற்கு வங்கத்தில், இந்த வைரஸின் அதிகபட்ச பாதிப்பு இதுவரை பதிவாகியுள்ளன.
- இந்தக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் குழந்தைகள்.
3-வது வகை – கொரோனா வைரஸ்
- மத்திய சுகாதார அமைச்சகத்தின் கூற்றுப்படி, மார்ச் 7 அன்று, நாட்டில் புதிதாக 326 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது..
- 67 நாட்களுக்குப் பிறகு, நாட்டில் கொரோனாவின் செயலில் உள்ள பாதிப்பு எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியுள்ளன.
- கேரளாவில் அதிகபட்சமாக 1474 பேருக்கும், கர்நாடகாவில் 445 பேருக்கும், மகாராஷ்டிராவில் 379 பேருக்கும் கொரோனா உறுதியாகி உள்ளது..
இந்த மூன்றுமே வைரஸ் காய்ச்சல். அதனால்தான் இந்த 3 காய்ச்சலின் அறிகுறிகளும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருக்கும். அதாவது, கொரோனா வைரஸை போன்றே, H3N2 வைரஸ் பாதிப்பிலும் தொண்டை புண், காய்ச்சல், மூக்கு ஒழுகுதல் போன்ற அறிகுறிகள் ஏற்படுகின்றன.. மேலும் கொரோனா, H3N2 வைரஸ் இரண்டும் சுவாச மண்டலத்தை பாதிக்கிறது.. இரண்டுமே நீர்த்துளிகள் மூலம் பரவுகிறது. எனவே கைகளை கழுவுவது நெரிசலான இடங்களில் முகக்கவசம் அணிவது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது முக்கியம்..
ஆனால் தற்போதுள்ள முக்கிய வேறுபாடு என்னவென்றால், இதுவரை H3N2 வைரஸ் காய்ச்சலை விட கொரோனா வைரஸ் காரணமாக அதிகமானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனால் எந்த வைரஸால் இந்த காய்ச்சலை உண்டாக்குகிறது என மக்களும் மருத்துவர்களும் குழப்பத்தில் உள்ளனர். ஆனால் பரிசோதிக்கப்படும் ஒவ்வொரு 10 நோயாளிகளில் 6 பேரின் மாதிரிகள் H3N2 வைரஸ் பாசிட்டிவாக இருப்பதை காட்டுகிறது..