fbpx

மக்களே..!! இனி ரூ.2,000 நோட்டை ஈசியாக மாற்றலாம்..!! ரிசர்வ் வங்கி சொன்ன குட் நியூஸ்..!!

ரூ.2000 நோட்டுகளை மாற்ற சிறப்பு கவுண்டர் அமைக்க ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரூ.2000 நோட்டுகள் திரும்ப பெறப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதன்படி, பொதுமக்கள் மே மாதம் 23ஆம் தேதியில் இருந்து 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்றும், 2023 செப்டம்பர் 30ஆம் தேதி வரை 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படும் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

இந்நிலையில், வாடிக்கையாளர்களின் வசதிக்காக வங்கிகளில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, ரூ.2000 மாற்ற சிறப்பு கவுண்டர் அமைக்க உள்ளதாகவும், வயதானவர்கள் வரிசையில் நிற்காத வகையில் தனி வசதி உருவாக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே, 2000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் மாற்றுவதற்கு பொதுமக்கள் எந்தவொரு அடையாள ஆவணத்தையும் சமர்ப்பிக்க தேவையில்லை என பாரத ஸ்டேட் வாங்கி தெரிவித்துள்ளது. மேலும், ஒரே நேரத்தில் ரூ.20,000 மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் எனவும் எஸ்பிஐ அறிவித்துள்ளது.

Chella

Next Post

எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்..!! இந்த வேலையை இனி ஆன்லைன் மூலமே முடித்துவிடலாம்..!!

Mon May 22 , 2023
இனிமேல் எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் கணக்கு அறிக்கைக்காக அதாவது, பேங்க் ஸ்டேட்மெண்ட் எடுப்பதற்கு வங்கிக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சேவையை வாடிக்கையாளர்கள் இனி ஆன்லைன் வாயிலாக பெற முடியும். அந்தவகையில், பாஸ்புக்கை என்ட்ரி செய்ய வேண்டிய அவசியமில்லை. வாடிக்கையாளர்கள் தற்போது வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் அனைத்து தகவல்களையும் புதுப்பித்துக் கொள்ள முடியும். வங்கிகள் இந்த சேவைக்கு ஒரு குறிப்பிட்ட எண்களை வழங்கியுள்ளது. இந்த எண்களை அழைப்பதன் மூலம் இச்சேவைக்கு […]

You May Like