fbpx

அதிர்ச்சி…! காலை உணவு சமைக்கும் பள்ளி சுவரில் மனித கழிவுகளை பூசி சென்ற நபர்கள்…!

சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே உள்ள காவேரிபுரம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளி கடந்த 1950ம் ஆண்டு மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜரால் திறந்துவைக்கப்பட்டது. இந்த பள்ளிக்கு சுற்றுச்சுவர் எதுவும் இல்லாத சூழ்நிலையில் அவ்வப்போது அந்த பகுதியில் உள்ள இளைஞர்கள் சிலர் அங்கு வந்து மது அருந்துவதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை பள்ளிக்கு விடுமுறை என்பதால் அங்கு வந்த மர்ம நபர்கள் முதலமைச்சரின் காலை உணவு தயாரிக்கும் சமையலறை சுவரில் மனிதக்கழிவை பூசிவிட்டு சென்றுள்ளனர். நேற்று காலை சமையலறைக்கு சென்ற ஊழியர்கள் இதனை கண்டு அதிர்ச்சி அடைந்து சம்பவம் தொடர்பாக உடனடியாக பள்ளியின் தலைமை ஆசிரியர்களுக்கு தகவல் தெரிவித்தனர். இதை அடுத்து காவல் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்க காவல் துறை அதிகாரிகள் முன் வரவில்லை என்று சொல்லப்படுகிறது.

சம்பவம் தொடர்பாக ஊடகங்களில் செய்து வெளியான நிலையில் அதிகாரிகள் பள்ளிக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பள்ளியின் சமையலறை சுவரில் மனிதக்கழிவு பூசிவிட்டுச் சென்ற மர்மநபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தமிழகத்தில் பொது இடங்களில் மனித சமூகத்திற்கு எதிரான அநாகரிகமான செயல்கள் தொடர்ந்து அதிகரித்த வண்ணமாக இருக்கின்றன. அண்மையில் புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் பகுதியில் பொதுமக்கள் குடிநீர் அருந்தும் தொட்டியில் மலம் கலந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை கண்டு பிடிக்க முடியாமல் திணறி வரும் தமிழக காவல்துறை குற்றவாளிகளை கைது செய்யவில்லை.

Vignesh

Next Post

இந்தியாவில் 5 ஜி சுற்றுச்சூழல் மூலம் டிஜிட்டல் மாற்றம்...! கருத்துக்களைப் பெற கடைசி தேதி நீட்டிப்பு...!

Tue Oct 31 , 2023
5 ஜி சுற்றுச்சூழல் மூலம் டிஜிட்டல் மாற்றம்” குறித்த டிராய் ஆலோசனை அறிக்கை மீதான கருத்துக்களைப் பெற கடைசி தேதி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் செப்டம்பர் 29 தேதியிட்ட “5 ஜி சுற்றுச்சூழல் மூலம் டிஜிட்டல் மாற்றம்” குறித்த ஆலோசனை அறிக்கை குறித்து பங்கெடுப்பாளர்களின் கருத்துகள், எதிர் கருத்துகளை கோரியது. பங்கெடுப்பாளர்களிடம் இருந்து எழுத்துப்பூர்வ கருத்துகள் மற்றும் எதிர் […]

You May Like