fbpx

’Periods சார் என்னை விட்ருங்க சார்’..!! கெஞ்சும் மாணவி..!! அடம்பிடிக்கும் ஆசிரியர்..!! அதிர்ச்சி ஆடியோ..!!

நர்சிங் கல்லூரி மாணவி ஒருவரிடம் ஆசிரியர் தனது காம இச்சைக்கு அடிபணியுமாறு பேசும் செல்போன் ஆடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாகை மாவட்டம் புத்தூர் பகுதியில் பாஜக நிர்வாகி கார்த்திகேயனுக்கு சொந்தமான நர்சிங் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். மேலும், இக்கல்லூரியில் உடற்கூறியியல் ஆசிரியராக பணிபுரியும் நாகை வெளிப்பாளையம் பகுதியை சேர்ந்த சதிஷ் என்பவர் மாணவிகளிடம் அடிக்கடி பாலியல் சில்மிஷத்தில் ஈடுபடுவார் என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில், அக்கல்லூரியில் பயிலும் நர்சிங் மாணவி ஒருவரிடம் ஆசிரியர் தனது காம இச்சைக்கு அடிபணியுமாறு பேசும் செல்போன் ஆடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

’Periods சார் என்னை விட்ருங்க சார்’..!! கெஞ்சும் மாணவி..!! அடம்பிடிக்கும் ஆசிரியர்..!! அதிர்ச்சி ஆடியோ..!!
ஆசிரியர் சதீஷ்

இருபாலர் பயிலும் நர்சிங் கல்லூரியில் மாணவர்களும், மாணவிகளும் பேசிக்கொள்ளக் கூடாது என்ற விதி உள்ள நிலையில் ஆண்களிடம் பேசும் மாணவிகளை ஆசிரியர் சதீஷ் தனியாக அழைத்து கண்டித்து வருவதாக கூறப்படுகிறது. அதன்படி, ஆசிரியர் சதீஷ் மாணவி ஒருவரை தனது வீட்டிற்கு அழைத்துள்ளார். அதற்கு அந்த பெண் நான் கல்லூரிக்கு வருகிறேன் சார் என்று கூறியும் அதற்கு அந்த ஆசிரியர் வீட்டிற்கு அழைத்து கட்டாயபடுத்துவதுமான ஆடியோ வெளியாகியுள்ளது. ஒருகட்டத்தில் தனக்கு மாதவிடாய் வலி இருப்பதாக சொல்லியும் அதை புரிந்து கொள்ளாத அந்த காமவெறி கொண்ட ஆசிரியர், ’பரவாயில்லை நான் பார்த்துக்கொள்கிறேன் வா’ என்று தனது வீட்டிற்கு அழைக்கிறார்.

’Periods சார் என்னை விட்ருங்க சார்’..!! கெஞ்சும் மாணவி..!! அடம்பிடிக்கும் ஆசிரியர்..!! அதிர்ச்சி ஆடியோ..!!

இந்நிலையில், பாஜக நிர்வாகி கார்த்திகேயன் தன்னுடைய கல்லூரி மாணவிகளிடம் சமரசத்தில் ஈடுபடும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் மாவட்ட சமூக நலத்துறை அதிகாரி தமிமுன்சா தலைமையிலான அதிகாரிகள் கல்லூரியில் நேரில் விசாரணை மேற்கொண்டனர். கல்லூரி மாணவிகளிடம் தனித்தனியே வாக்குமூலம் எழுதி வாங்கிய அதிகாரிகள், கல்லூரி தாளாளர், முதல்வர், ஆசிரியர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வலியுறுத்தப்பட்ட நிலையில், கல்லூரி சார்பில் அந்த ஆசிரியர் சதீஷ் உடனடியாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும், தொடர்ந்து கல்லூரி நிர்வாகம் சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் நாகை நகர காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து சதீஷ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Chella

Next Post

நயன்தாராவிற்கு போய் ஃபீடிங் பாட்டில் வாங்கி கொடு! முதல்வரின் குடும்பத்தையே கிழித்து தொங்க விட்ட முன்னாள் அமைச்சர்!

Thu Dec 15 , 2022
திமுக என்ன தான் ஆளும் கட்சியாக இருந்து ,அதிகாரத்தை தன் கையில் வைத்திருந்தாலும் அதிமுகவில் இருக்கும் சில முக்கிய புள்ளிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் சற்று அஞ்சி நடுங்கி கொண்டு தான் இருக்கிறார் என்று தகவல் வெளியாக தொடங்கியுள்ளது. அதில் முதல் இடத்தில் இருப்பவர் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி. அவர் எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பேற்ற அடுத்த கணமே திமுகவினரிடையே பயம் தொற்றிக் கொண்டதாக சொல்லப்பட்டது. அடுத்தபடியாக முன்னாள் அமைச்சர் சிவி […]

You May Like