சின்னத்திரை பிரபலம் சித்ரா கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்… அவரது மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்த நிலையில், சித்ராவின் மரணத்திற்கு தற்கொலை தான் காரணம் என்று உடற்கூறாய்வு அறிக்கை கூறுகிறது. ஆனால் சித்ராவின் பெற்றோர் மற்றும் நண்பர்கள் அதில் பல்வேறு சந்தேகங்களை எழுப்பி வருகின்றனர்..
இதையடுத்து தற்கொலைக்கு தூண்டிய குற்றச்சாட்டில் சித்ராவின் கணவர் ஹேம்நாத் கைது செய்யப்பட்டார்.. பின்னர் கடந்த ஆண்டு அவருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.. இதனிடையே தங்கள் மகளின் தற்கொலைக்கு ஹேம்நாத் தான் காரணம் என்று சித்ராவின் பெற்றோர் குற்றம்சாட்டுகின்றனர்.. ஆனால் சித்ராவின் மரணத்தில் அரசியல் புள்ளிகளுக்கு தொடர்பு இருப்பதாகவும், தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் ஹேம்நாத் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்..
மேலும் ஹேம்நாத் உள்ளிட்டோர் மீது காவல்துறை பதிவு செய்த வழக்கில் தன் மீதான குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய கோரி ஹேம்நாத் வழக்கு தொடர்ந்தார்.. இந்நிலையில் ஹேம்நாத் மீதான் வழக்கை ரத்து செய்யக் கூடாது என்று சித்ராவின் தந்தை காமராஜ் உயர்நீதிமன்றத்தில் பதில் மனு அளித்துள்ளார்., அதில் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஹேம்நாத் தனது மகள் சித்ராவை சித்ரவதை செய்ததாகவும் காமராஜ் தெரிவித்துள்ளார்..
விசாரணையில் இருந்து தப்பிப்பதற்காகவே தன்மீதான வழக்கை ரத்து செய்ய ஹேம்நாத் கோருவதாகவும், போதிய ஆதாரங்கள் உள்ள நிலையில் விசாரணை நீதிமன்றத்தில் உள்ள வழக்கை விசாரணையை எதிர்கொள்வதே சரியானது எனவும், எனவே ஹேம்நாத் மீதான வழக்கை ரத்து கூடாது என்றும் சித்ராவின் தந்தை தெரிவித்துள்ளார்..