fbpx

பிளஸ்2 மாணவி மர்ம மரணம்..! மாணவர் அமைப்பினர் போராட்டம்..! போலீசார் மீது கல்வீச்சு..!

கள்ளக்குறிச்சியில் பிளஸ்2 மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்திற்கு நீதி கேட்டு, மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம் மகள் ஸ்ரீமதி (வயது 17). இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள தனியார் பள்ளியில், விடுதியில் தங்கி 12ஆம் வகுப்பு வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், கடந்த 13ஆம் தேதி மாணவி ஸ்ரீமதி விடுதியின் 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக அவரது பெற்றோருக்கு பள்ளி நிர்வாகம் தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதுபற்றிய தகவல் அறிந்து வந்த சின்னசேலம் போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், பிரேத பரிசோதனை செய்யப்பட்டுள்ள மாணவியின் உடலை வாங்க மறுத்து பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் 5-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பிளஸ்2 மாணவி மர்ம மரணம்..! மாணவர் அமைப்பினர் போராட்டம்..! போலீசார் மீது கல்வீச்சு..!

இந்நிலையில், கள்ளக்குறிச்சி-சின்னசேலம் அருகே தனியார் பள்ளியில் பிளஸ் 2 மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில் நீதி கேட்டு மாணவர் அமைப்பினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அப்போது போலீசார் மீது போராட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்க தொடங்கினர். இதில், போலீசார் பலர் காயம் அடைந்தனர். இதனால் அந்த பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகின்றது. இதனால், போராட்டத்தை கட்டுக்குள் கொண்டு வருவதில் சிக்கல் நீடித்து வருகின்றது.

Chella

Next Post

பிளஸ்2 பொதுத்தேர்வு..! விடைத்தாள் திருத்தலில் ஆசிரியர்கள் செய்த காரியத்தால் மாணவர்கள் அதிருப்தி..!

Sun Jul 17 , 2022
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் விடைத்தாள்களை மதிப்பீடு செய்து மதிப்பெண் வழங்கியதில் ஆசிரியர்கள் தவறிழைத்துள்ளது தெரியவந்துள்ளது. தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்து முடிந்து, முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், மாணவர்கள் மறுகூட்டல் மற்றும் விடைத்தாள் நகலை பெறுவதற்குரிய அறிவிப்பை அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டது. அந்த வகையில், தேர்வு முடிவுகள் வெளியான பின்பு தங்களுக்கு வழங்கப்பட்ட மதிப்பெண்களில் திருப்தி இல்லாத மாணவர்கள் விடைத்தாள் நகலை பெற்று, தங்களுக்கான மதிப்பெண்களை சரிபார்த்தபோது, அதில் […]
பிளஸ்2 பொதுத்தேர்வு..! விடைத்தாள் திருத்தலில் ஆசிரியர்கள் செய்த காரியத்தால் மாணவர்கள் அதிருப்தி..!

You May Like