ரஜினிகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதயத்தில் இருந்து பிரியும் பிரதான இரத்த நாளத்தில் அவருக்கு வீக்கம் இருந்ததாகவும் அதை அறுவை சிகிச்சை இல்லாமல் சரி செய்துவிட்டதாகவும் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும், நடிகர் ரஜினிகாந்த் நலமுடன் உள்ளதாகவும், 2 நாட்களில் வீடு திரும்புவார் என்றும் அப்போலோ மருத்துவமனை தெரிவித்துள்ளது. இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் விரைவில் குணமுற்று வீடு திரும்ப கவிஞர் வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்
“திரு ரஜினிகாந்த்
சீராகத் தேறிவருகிறார் என்பது
நெஞ்சுக்கு நிம்மதி தருகிறது
மருத்துவ மொழியின்
நல்ல வார்த்தைகள்
நம்பிக்கை தருகின்றன
நாட்டின்
மருத்துவக் கட்டமைப்பும்
சர்வதேசத் தரத்தில் இயங்கும்
மருத்துவர்களின் மேதைமையும்
ரஜினி அவர்களை
நிச்சயம் மீட்டெடுக்கும்
அவர் ஈட்டி வைத்திருக்கும்
நாட்டு மக்களின் நல்லன்பு
அவரைப் பத்திரமாய்ப்
பாதுகாக்கும்
விரைவில் குணமுற்று
வீடுதிரும்ப வாழ்த்துகிறேன்
நீங்களும் வாழ்த்துங்கள்”
இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Read more ; ‘ரஜினி நலமுடன் உள்ளார்’ இன்னும் இரண்டு நாளில் டிஸ்சார்ஜ்..!! – அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை