சினிமாவில் வாய்ப்பு தருவதாக கூறி இளம் பெண்களின் வாழ்க்கையை சீரழிக்கும் வழக்கம் நெடுங்காலமாகவே சினிமாவில் இருந்து வருகிறது. இந்நிலையில் சினிமாவில் வாய்ப்பு தருவதாக ஏமாற்றி இளம் பெண்ணை பாலியல் பலவந்தம் செய்த தயாரிப்பாளரை கைது செய்து இருக்கிறது காவல்துறை.
கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியைச் சார்ந்தவர் மார்ட்டின் செபஸ்டியன். இவர் மலையாள சினிமாவில் தயாரிப்பாளராக இருந்து வருகிறார். இவர் மீது திருச்சூரைச் சார்ந்த இளம் பெண் ஒருவர் போலீசில் புகார் அளித்திருக்கிறார். அந்தப் புகாரில் 2000 ஆண்டு முதல் 2002 ஆம் ஆண்டிற்கு இடைப்பட்ட காலகட்டத்தில் குற்றம் சாட்டப்பட்ட மார்டின் செபாஸ்டின் தனக்கு சினிமாவில் வாய்ப்பு தருவதாக கூறி தன்னை பலாத்காரம் மற்றும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக அந்தப் புகாரில் தெரிவித்திருக்கிறார்.
மேலும் அந்தப் பெண்ணிடம் இருந்து 78 லட்ச ரூபாய் ரொக்க பணமும் 80 சவரன் நகைகளையும் தயாரிப்பாளர் மோசடி செய்துள்ளதாக தெரிவித்திருக்கிறார். இந்த புகாரை தொடர்ந்து காவல்துறையினர் கடந்த டிசம்பர் மாதம் உனக்கு புதுச்சேரி விசாரணையை தொடங்கினார். அப்போது காவல்துறை தன்னை கைது செய்யாமல் இருக்க கோர்ட்டில் முன் ஜாமீன் கோரி இருந்தார் மார்ட்டின் செபாஸ்டின்.
இந்நிலையில் இந்த மனுவை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் செபாஸ்டின் காவல்துறை முன் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன் அவருக்கு ஜாமீன் வழங்கியிருந்தது. இதனைத் தொடர்ந்து செபாஸ்டியனிடம் நடத்தப்பட்ட 72 மணி நேர விசாரணைக்கு பிறகு போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர் அவர் எர்ணாகுளத்தில் உள்ள ஆடம்பர விடுதிக்கு சாட்சி விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். இந்த விவகாரம் மலையாள திரைப்பட உலகில் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.